கணைய செயல்பாட்டை தூண்டும் அற்புத மூலிகை கறிவேப்பிலை !! - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, December 8, 2021

கணைய செயல்பாட்டை தூண்டும் அற்புத மூலிகை கறிவேப்பிலை !!

கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட தாவரம் ஆகும். கறிவேப்பிலை மரத்தின் இலை, பட்டை, வேர் என அனைத்துப் பாகங்களும் மருத்துவ பயன் கொண்டதாகும். கறிவேப்பிலை வாசனைப் பொருளாக மட்டும் இல்லாமல், நாம் சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. 

இதற்கு காரணம் கறிவேப்பிலை ஒரு சிறந்த நோய் எதிர்ப்புக் சக்தி கொண்ட இலையாகும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன. கறிவேப்பிலை இருவகைப்படும் அவை, "நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலையானது உணவிலும், காட்டுக் கறிவேப்பிலை மருந்து தயாரிப்பிலும் பயன்படுகிறது. 

 கறிவேப்பிலை இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்து, அந்நீரை சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு வயதுக்கு தக்கவாறு கொடுத்து வர, மாந்த பிரச்சனை நீங்கி பசி அதிகரிக்கும். கறிவேப்பிலைப் பொடி, நெல்லிப் பொடி, மஞ்சள் பொடி மூன்றையும் கலந்து ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் கணையச் செயல்பாட்டைத் தூண்டும். இதன் மூலம் உடலில் இன்சுலின் தேவையான அளவு சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை வியாதியின் தாக்கம் விரைவில் குறையும்.

No comments:

Post a Comment