அம்மான் பச்சரிசி மூலிகையின் மருத்துவ பயன்கள் !! - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, December 8, 2021

அம்மான் பச்சரிசி மூலிகையின் மருத்துவ பயன்கள் !!

அம்மான் பச்சரிசி மூலிகையானது ஈரபதம் உள்ள இடங்களில் தானாக வளரும் தன்மையுடையது. இது சிறு செடிவகையாகும். இதன் இலைகள் எதிர் எதிர் அடுக்கில் கூரான நுனிப்பற்களுடன் ஈட்டி வடிவ அமைப்பு கொண்டது. அம்மான் பச்சரிசியின் இலை, தண்டு, பால், பூ போன்ற அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. அம்மான் பச்சரிசி பூக்களின் நிறங்களின் அடிப்படையில் பெரியமான் பச்சரிசி, சிற்றம்மன் பச்சரசி, சிவப்பம்மான் பச்சரிசி, வெள்ளையம்மான் பச்சரிசி, வயம்மாள் பச்சரிசி போன்ற பெயர்களில் அழைக்கபடுகின்றன. 

 அம்மான் பச்சரிசி இலையை அரைத்து சுமார் சிறிதளவு பால் அல்லது மோரில் கலக்கிப் பெரியவர்களுக்குக் கொடுத்தால் வெயிலினால் ஏற்படும் வேட்டை, மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படும் உஷ்ணம் ஆகியவை போகும். இதன் இலைகளை சமைத்து சாப்பிட்டால் உடல் வறட்சி நீங்கும். பனியினால் ஏற்படும் வாய், நாக்கு, உதடு, வெடிப்பு குணமாகும். இதை தூதுவளை இலையுடன் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பலமாகும். 

இதன் பாலைத் முகத்தில் தடவி வந்தால் முகப்பரு, மற்றும் பால்பருக்கள் மறையும். கால் ஆணி வலி குறையும். இதன் இலையை நன்கு அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து பசும் பாலில் கலக்கிக் காலை வேளையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் குருதிப்போக்கு, மலக்கட்டு, நீர்கடுப்பு, போன்றவை குணமாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். 

இவர்கள் தாய்ப்பால் அதிகம் சுரக்க, அம்மான் பச்சரிசி பூக்களை பசும்பால் விட்டு அரைத்து, பசும்பாலிலேயே கலந்து காலை வேளைகளில் பருகி வந்தால் பால் சுரப்பு அதிகரிக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்க அம்மான் பச்சரிசியின் இலையை அரைத்து மோரில் கலந்து காலை வேளையில் வெறும் வயிற்றில் 3 முதல் 5 நாட்கள் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

No comments:

Post a Comment