இல்லம் தேடி கல்வித் திட்டம் நிதி செலவினம் சார்ந்து வட்டார வளமையத்தில் தனி வங்கிக்கணக்கு தொடங்குதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை - 600 006
மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண். 449/C7/ SS/2021, நாள் 3.12.2021
பொருள் :
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - "இல்லம் தேடிக் கல்வி"
திட்டம் நிதி செலவினம் சார்ந்து வட்டார வளமைய அளவில்
வங்கி கணக்கு துவங்க மாவட்டங்களுக்கு வழிகாட்டு
நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு
கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை
பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளி மற்றும்
இழப்புகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 மணி
நேரம் முதல் 1 மணிநேரம் வரை (மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிக்குள்)
கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை
மேம்படுத்தும் வகையிலும் இடைநிற்றலை முற்றிலும் களைவதற்கும்
ஏற்றவகையில் செயல்படுத்தப்பட உள்ள "இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு
தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்ற தன்னார்வலர்களுக்கு இல்லம் தேடிக்
கல்வியின் முக்கியத்துவம், தன்னார்வலர்கள் பங்களிப்பின் அவசியம் மற்றும்
முக்கியத்துவம், தன்னார்வலர்களை ஊக்கப்படுத்துதல், குழந்தைகளை கையாள
வேண்டிய விதம் மற்றும் கற்றல் கற்பித்தல் முறைகள் குறித்து இரு நாட்கள்
பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது,
இப்பயிற்சியானது வட்டார வளமைய பயிற்சியாக 1-5 வகுப்புகளை
கையாளும் தன்னார்வலர்களுக்கு ஒரு பிரிவாகவும், 6-8 வகுப்புகளை கையாளும்
தன்னார்வலர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சியானது ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளுக்கும் மாணவர்கள்
எண்ணிக்கைக்கேற்ப இல்லம் தேடிக் கல்வி மையங்கள் தொடங்குவதற்கு
தேவைப்படும் தன்னார்வலர்கள் கண்டறியப்படும் வரை தொடர்ந்து நடைபெற்று
கொண்டிருக்கும். இப்பயிற்சிக்கான நிதி மாநில திட்ட இயக்ககத்திலிருந்து
மாவட்ட இதர நிதி வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்படுகிறது.
தற்பொழுது பயிற்சிக்கான செலவினங்களை காலதாமதம் ஏற்படாத
வண்ணம்
வட்டார வளமையங்களில் மேற்கொள்ளுவதற்கேதுவாக வட்டார வவதன்வளமையங்களில் நிதி விடுவிக்கப்பட வேண்டும். அதற்காக வட்டார
வளமையங்களில் இதர நிதி வங்கி கணக்கு துவங்கப்பட வேண்டும். இவ்வங்கி
கணக்கு பொறுப்பு மேற்பார்வையாளர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகிய
இருவர் கூட்டு கையொப்பத்தோடு கொண்டு (Joint Signatory) செயல்பட
கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு துவங்கும் பட்சத்தில்
மாவட்டத்திலிருந்து இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்காக மாவட்ட இதர நிதி
வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்பட்டுள்ள நிதியினை வட்டார வளமையங்களுக்கு
விடுவிக்கலாம். அவ்வாறு விடுவிக்கும் பட்சத்தில் வட்டார வளமையங்களில்
ரொக்க பதிவேடு (Cash Book) மற்றும் பற்றுசீட்டுகளை இல்லம் தேடிக் கல்வி
என்று தனியாக பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து செலவினங்களும் இயன்ற
வரை காசோலை மற்றும் மின்னணு பரிமாற்றம் (ECS) மூலமாகவே
செய்யவேண்டும். அவ்வாறு இயலாதபட்சத்தில் ரூ.5,000/- வரை ரொக்க
பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதையே வாடிக்கையாக எடுத்துக்கொள்ள
கூடாது. செலவினம் முடிந்த பின்பு, பயன்பாட்டுச் சான்றிதழ் (UC) மாவட்டத்திற்கு
வழங்கப்பட வேண்டும்:
எனவே மேற்காண் வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றி, இல்லம்
தேடிக் கல்வி திட்டத்தினை மாவட்டங்களில் சிறந்த முறையில் செயல்படுத்த
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
பெறுநர் :
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
மாநில திட்ட இயக்குநருக்காக
No comments:
Post a Comment