பள்ளிக்கல்வி ஆணையரகம்
அனுப்புநர்
க.நந்தகுமார், இ.ஆ.ப.,
ஆணையர்,
பள்ளிக்கல்வி, டி.பி.ஐ. வளாகம்,
சென்னை-6.
பெறுநர்
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்
ந.க.எண் 42088/01/இ4/2021 நாள் 17.12.2021.
அய்யா/அம்மையீர்,
பொருள்:
பள்ளிக்கல்வி பள்ளிகள் பாதுகாப்பு மாவட்டங்களில்
பள்ளிக்கட்டடங்களின் பாதுகாப்பபை உறுதி செய்தல் - சார்ந்து.
பார்வை: சென்னை-6,பள்ளிக்கல்வி ஆணையரின் சுற்றறிக்கை
ந.க. எண். 42048/01/64/2021 நாள் 10.08.2021.
***
பார்வை 1-ல் கண்ட செயல்முறைகளின்படி பள்ளிக் கல்வித் துறையில்
பணிபுரியும் இணை இயக்குநர் நிலையிலான அலுவலர்கள் ஒவ்வொரு
மாவட்டத்திற்கும் பொறுப்புப் பணி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டு பள்ளி
திறப்பதை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகளை மேற்பார்வை
செய்தனர். அப்பணிகளின்போது இடித்து அகற்றப்பட வேண்டிய கட்டடங்கள்,
பராமரிப்பு தேவைப்படும் கட்டடங்கள், புதிதாகத் தேவைப்படும் கட்டடங்கள்
கணக்கெடுக்கப்பட்டு கடந்த இரு மாதங்களாக தகுதியற்ற நிலையிலுள்ள
கட்டடங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் படிப்படியாக இடிக்கப்பட்டு
வருகின்றது. பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு
அரசுத் துறைகளின் வாயிலாக சுமார் 250 கோடி ரூபாய் செலவில் பராமரிப்புப்
பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது,
இப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க ஏதுவாக ஊரக வளர்ச்சி,
வருவாய், பொதுப்பணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளைச்
சார்ந்த அலுவலர்கள் கொண்ட குழுவினை அமைத்து தக்க நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இக்குழுவைக் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் உள்ள
அனைத்துக் கட்டடங்களின் உறுதித் தன்மையை சரிபார்க்கும்படி
கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இவ்வாறு தேவையற்ற ஆபத்தான
கட்டடங்களை இடிப்பதால் வகுப்புகளை நடத்த கூடுதலாகத் தேவைப்படும்
இடவசதிக்கென பள்ளி வளாகங்களுக்கு அருகில் உள்ள பிற பள்ளிகளுக்கோ
தேவைப்படின் வாடகைக்கோ தக்க இடங்களை ஏற்பாடு செய்து மாணவர்களின்
கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் எவ்வித தடையுமின்றி நடைபெற ஆவன
செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேற்கூறிய பணிகளை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சிர்களுக்கு உதவ
இணைப்பில் கண்டுள்ள பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர்கள்
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இணைப்பு: பட்டியல்
பள்ளிக்கல்வி ஆணையருக்காக.
நகல்
1. அனைத்து இணை இயக்குநர்கள்
2. அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள்
3. அரசு முதன்மைச்செயலாளர், பள்ளிக்கல்வித்துறை, தலைமைச்செயலகம்,
சென்னை-9.
No comments:
Post a Comment