அரசுப் பள்ளிகளில் மரம் நடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரக உதவி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Assistant Director of the School Education Commisionerate regarding tree planting in Government Schools) - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, December 25, 2021

அரசுப் பள்ளிகளில் மரம் நடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரக உதவி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Assistant Director of the School Education Commisionerate regarding tree planting in Government Schools)

அரசுப் பள்ளிகளில் மரம் நடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரக உதவி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Assistant Director of the School Education Commisionerate regarding tree planting in Government Schools) 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக உதவி இயக்குநர்(சுற்றுசூழல்) செயல்முறைகள்: சென்னை-6 ந.க.எண்.31653/எம்/இ2/2021 நாள்:15.12.2021 பொருள்: 

பார்வை; 

வனம்-2021-22ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மரம் நடுதல்- தொடர்பாக. 1. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கடிதம் எண்.ஜேபி2/ 16982/2021 நாள் 14,09,2021 2.இவ்வலுவலக ந.க.எண்.31653/எம்/இ2/2021 'நாள்: 1911.2021 

பார்வை 1 மற்றும் 2இல் காணும் கடிதத்தின்படி, 2021-22 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மரம் நடும் திட்டத்தின்கீழ். அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் மரம் நடும் செயல்பாட்டினை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர் நடவடிக்கையாக அந்தந்த மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் மரக்கன்றுகளை தன்னார்வளர்கள் மற்றும் நலச் சங்கங்களை தொடர்பு கொண்டு நடுவதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள சார்ந்த மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர்கள் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திடவும் மற்றும் அதனை பராமரிக்கவும் தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும் எனவும் இதன் மூலம் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது, 

மேலும் இதன் மாதாந்திர தொகுப்பறிக்கையினை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ஒவ்வொரு மாதம் 30ஆம் தேதிக்குள்ளாக, இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்கவும், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், Bann உதவி இயக்குநர்(சுற்றுசூழல் IT) பள்ளிக்கல்வி ஆணையரகம், சென்னை-6. பெறுநர் जाप அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். நகல்: முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் பனகல் மாளிகை,சைதாப்பேட்டை, சென்னை-15





No comments:

Post a Comment