2000க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, January 14, 2022

2000க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவ பொதுப் பள்ளிகள் என்பது ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கான ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய தொடர் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். 

ராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு இதனை செயல்படுத்தி வருகிறது. இந்திய அரசின் நிதி உதவியுடன், முதன் முதலில் 1983 இல் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் தற்போது 137 ராணுவ பொதுப் பள்ளிகளும் 249 மழலையர் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் இந்திய ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு மத்திய உயர்நிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றி முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி அளிக்கப்படுகிறது. தற்போது பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ பொதுப் பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Army Welfare Education Society அறிக்கை எண். APS OST 2021-22 Exam மொத்த காலியிடங்கள்: 2000 + காலியிடங்கள் 

பணி: TGT(Trained Graduate Teachers) பணி: PGT (Post Graduate Teacher) 

 பணி: PRT (Primary Teacher) 

 தகுதி: இளநிலை, முதுநிலைப் பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள், ஆசிரியர் பயிற்சி முடித்து CTET/TET தேர்வில் 60 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் தொடர்புகொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

முழு விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். வயதுவரம்பு: 29 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு கட்டணம்: ரூ.385 தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரினீங் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

 விண்ணப்பிக்கும் முறை:

 https://www.apsbathinda.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2022

No comments:

Post a Comment