சரும ஆரோக்கியத்திற்கு அழகு தரக்கூடிய எளிய அழகு குறிப்புகள் !! - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, January 14, 2022

சரும ஆரோக்கியத்திற்கு அழகு தரக்கூடிய எளிய அழகு குறிப்புகள் !!

சரும ஆரோக்கியத்திற்கு அழகு தரக்கூடிய எளிய அழகு குறிப்புகள் !! ஆயிரக்கணக்கான பணத்தை பார்லர்களில் செலவிடுவதை விட இந்த முறையை செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். அரை கிலோ கடலை பருப்பு, துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி, நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

 கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அரைத்த பொடியை போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்திற்கு பூசி ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவாக காணப்படும். சோர்வு தெரியாது. வாரம் ஒரு முறை செய்தால் பள,பளவென முகம் பிரகாசமாக இருக்கும். வெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு, சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாகும். தேங்காய் பால் 1 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசை போல பிசைந்து, பின்னர் முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும்.

 வாரம் இரு முறை இப்படி செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும். தொன்று தொட்ட முதியோர் காலத்திலிருந்து பாரம்பரியப் பொருனாக பயன்படுத்தப்படும் பொருள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். 

சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும். உருளைகிழங்கு சாறுடன் கடலை மாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும். இது உங்களுக்கு பார்லர்களில் பேசியல் செய்தது போன்ற ஒரு அனுபவத்தை கொடுக்கும்.

No comments:

Post a Comment