பற்கூச்சம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் வெற்றிலை !!
நமது நாட்டின் பாரம்பரியத்தில் எந்த ஒரு விருந்து நிகழ்ச்சியிலும் இறுதியாக "வெற்றிலை" சாப்பிடும் பழக்கம் பல காலமாக பின்பற்றப்படுகிறது.
இந்த வெற்றிலை கொண்டு எத்தகைய உடற்குறைபாடுகள், நோய்கள் போன்றவற்றை தீர்க்கலாம்.
வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்சனை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் சேர்த்து மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகும்.
சிறுநீரில் உள்ல நச்சுக்களை நீக்கும். சிறுநீர் அதிக அளவு பெருகி சீரான கால இடைவெளியில் சிறுநீர் கழிக்க செய்து உடல் நலத்தை மேம்படுத்த செய்கின்றது இந்த வெற்றிலை.
உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் நோய்கள், அடிபடுதல் போன்றவற்றால் மிகுந்த வலி ஏற்பட்டு அவதிபடும் நேரங்களில் ஒரு முழு வெற்றிலையை சுத்தம் செய்து வாயில் போட்டு நன்கு மென்று நீரருந்தினால் சீக்கிரத்தில் வலி குறையும்.
வெட்டு காயங்கள், சிராய்ப்புகள் வீக்கங்கள் போன்றவற்றிற்கு வெற்றிலைகளை நன்கு அரைத்து காயங்களின் மீது பற்று போட்டால் அவை சீக்கிரத்தில் குணமாகும்.
குளிர்காலங்களில் ஏற்படும் சளி தொந்தரவுகளால் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுபவர்களுக்கும், ஆஸ்துமா நோய் இருப்பவர்களுக்கும் சிறந்த நிவாரணம் அளிக்க வல்லது வெற்றிலை.
ஒரு சில வெற்றிலைகளை எடுத்து கொண்டு, அதில் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் காட்டி வயிற்றின் மீது வைத்து எடுக்க வேண்டும். இது போல் பத்து நிமிடங்கள் வரை செய்தால் வயிற்றில் இருக்கும் வாயு நீங்கும்.
எத்தகைய உணவை சாப்பிட்ட பின்பும், வெற்றிலைகளை நன்கு மென்று அதன் சாறுகள் பற்கள், ஈறுகளில் தங்கியிருக்கும் கிருமிகளை அழிக்கிறது. பற்சொத்தை, பற்கூச்சம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
No comments:
Post a Comment