நேரடி வகுப்புகளுக்கு தடை என்றாலும் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் வழக்கம்போல் நடக்கும் கல்வித்துறை தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, January 4, 2022

நேரடி வகுப்புகளுக்கு தடை என்றாலும் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் வழக்கம்போல் நடக்கும் கல்வித்துறை தகவல்

நேரடி வகுப்புகளுக்கு தடை என்றாலும் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் வழக்கம்போல் நடக்கும் கல்வித்துறை தகவல் 

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வேகம் எடுத்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வருகிற 10-ந்தேதி வரை நேரடி வகுப்புகளுக்கு தடைவிதித்து, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதனை பின்பற்றி இன்று (திங்கட்கிழமை) முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 

 இந்த நிலையில் இது தொடர்பாக மேலும் சில உத்தரவுகளை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் பின்வருமாறு:- 

 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிகளுக்கு வரவேண்டும். மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதியில்லை. 9 முதல் 12-ம் வகுப்பு வரை அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து சமூக இடைவெளியோடு நேரடி வகுப்புகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 

வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் வழக்கம்போல் குழந்தைகளின் இருப்பிடங்களுக்கே சென்று வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். அங்கும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும்.

No comments:

Post a Comment