கொழுப்புகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்குகாற்றும் முளை கட்டிய தானியங்கள் !!
உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
முளை கட்டிய தானியங்களில், சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக வைட்டமின் ஏ, பி-காம்ப்ளக்ஸ், சி மற்றும் ஈ ஆகியவை அதிரிகரிக்கின்றன.
முளை கட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்களை போதிய அளவில் சுரக்கச் செய்ய முடியும்.
ஒரு நாளைக்கு எதாவது ஒரு வேளை முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். பாதி உணவும், பாதி முளைகட்டிய தானியங்களும் இருக்குமாறு சாப்பிட்டால் நல்லது.
முளைகட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது காலை உணவுடன் சேர்த்தே சாப்பிட வேண்டும். தானியங்கள் மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் முளைகட்டிய தானியங்களை வேக வைத்து சாப்பிடலாம்.
முளைகட்ட வைக்க சுத்தமான நீரை பயன்படுத்துங்கள். கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் முளைகட்டிய தானியங்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதே போல தினமும் ஒரு வகையான தானியங்களை எடுப்பதற்கு பதிலாக ஒவ்வோரு நாளும் வெவ்வேறு விதமான தானியங்களை எடுக்கலாம்.
No comments:
Post a Comment