கூந்தல் பராமரிப்பில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் !! - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, January 17, 2022

கூந்தல் பராமரிப்பில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் !!

கூந்தல் பராமரிப்பில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் !! பெண்கள் நிறைய பேர் இரவில் தூங்கும்போது கூந்தலை இறுக்கமாக கட்டிக்கொள்ளும் வழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். அது தவறானது. அப்படி இறுக்கமாக கூந்தலில் கொண்டை போட்டுக்கொள்வது மயிர்கால்களை கடுமையாக பாதிக்கும். கூந்தலின் அடிப்பகுதியில் இருக்கும் வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைக்காது.

 அதனால் கூந்தல் முடிகள் பாதிப்புக்குள்ளாகும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கூந்தலை நன்றாக சீவுவதும் நல்லது. அப்படி செய்தால் கூந்தல் முடியில் சிக்கல் விழாமல் இருக்கும். இரவில் தூங்கும்போது சிக்கல்கள் விழுந்தாலும் எளிதில் சரிப்படுத்திவிடலாம். அதைவிடுத்து சிக்கல் முடியுடன் தூங்க சென்றால் அதன் பாதிப்பு அதிகமாகி விடும். அதனால் முடியின் அடர்த்தியும், வலிமையும் குறையும்.

 முடி கொட்டுதல் பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடும். தலையணை உறைகளை வாரத்திற்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும். ஏனெனில் தினமும் அதில் தலையை வைத்து படுக்கும்போது அதில் அழுக்குகள் சேர்ந்துவிடும். தலையில் இருக்கும் எண்ணெய்யும் தலையணை உறையில் படிந்து அழுக்குடனும் சேர்ந்துவிடும். அதில் தொடர்ந்து தலைவைத்து படுப்பது முடிக்கு பாதிப்பாகிவிடும்.

No comments:

Post a Comment