கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி பூ !!
செம்பருத்தி பூ இருதய நோய்களுக்கு நல்ல தீர்வு கொடுக்கிறது. இருதய நோயாளிகள் செம்பருத்தி பூ இதழ்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இதயம் பலப்படும்.
செம்பருத்தி பூ இதழ்களுடன் இரண்டு கருவேப்பிலை , இரண்டு காட்டு நெல்லிக்காய் , சிறிது இஞ்சி சேர்த்து கஷாயமாக தேன் சேர்த்து குடிக்க இருதய நோயாளிகளுக்கு வரக்கூடிய படபடப்பு நீங்கி அமைதி நிலையை அடைவார்கள்.
வெயில் காலங்களில் ஏற்படக்கூடிய உடல் உஷ்ணத்தை தவிர்த்து உடம்பினை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடல் உஷ்ணத்தால் வரக்கூடிய வாய்ப்புண் , வயிற்று புண்களை சரிசெய்து உடல் வெப்பநிலையை சமநிலையை கொடுக்கிறது.
செம்பருத்தி இதழ்களை நெய்யில் வதக்கி அதனை சாப்பிட்டு வர கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சினைகளும் சரியாகும். குறிப்பிட்ட வயதில் பருவம் அடையாத பெண்களுக்கு கூட இது ஒரு நல்ல ஒரு தீர்வாக அமைகிறது.
உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்து இரத்தசோகையை சரிசெய்யவல்லது. தூக்கமின்மை, வயிற்றுப்போக்கு , அசிடிட்டி போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இதனை பாலில் சேர்த்து சாப்பிடுவது நல்லது. மேலும் தலைமுடி வளர்ச்சிக்கும், இளநரை போன்ற பிரச்சினைகளுக்கும் இது ஒரு அருமருந்தாக இருக்கிறது.
இரத்த அழுத்தத்தை சரிசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காலையில் செம்பருத்தி டீயை அருந்திவர இருதயத்துக்கு நல்ல பயன் அளிக்கிறது.
No comments:
Post a Comment