எண்ணற்ற மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் நிறைந்துள்ள கசகசா !!
கசகசா என்பது ஒரு வகையான விதையாகும். இதை நாம் சமையலில் குறிப்பிட்ட சில வகையான உணவுகளுக்கு பயன்படுத்துகிறோம்.
ஆனால் அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் உள்ளது.
கசகசாவில் எண்ணற்ற பல சத்துக்கள் உள்ளது.
அதில் ஒன்றுதான் நார்ச்சத்து. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலத்தை இளக்கி மலச்சிக்கல் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.
வயிற்றுப்போக்கு ஏற்படும்போது அது தொடர்ந்து ஏற்பட்டு கொண்டிருந்தாள் உடல் கலைப்பு ஏற்பட்டுவிடும். அதை தடுப்பதற்கு கசகசாவை சிறிதளவு வாயில் போட்டு மென்று பின் நீர் குடித்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.
கசகசாவை தயிருடன் சேர்த்து அரைத்து அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்தக் கலவையை இரவு படுப்பதற்கு முன் முகத்தில் பூசி பின் காலையில் எழுந்தவுடன் முகத்தை கழுவினால் முகச் சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
தயிரானது எருமை தயிராக இருந்தால் நல்ல பலனைத் தரும். மேலும் கசகசாவை தினமும் உடலில் தேய்த்து குளித்து வர உடலிலுள்ள தேமல் மறையும்.
கசகசா, தேங்காய், மற்றும் சக்கரை சேர்த்து சாப்பிட்டு வர வாயில் உள்ள புண் அல்லது வாய் அல்சர் குணமாகும்.
No comments:
Post a Comment