தினம் ஒரு தகவல் காபி, டீ அதிகம் குடிப்பது நல்லதா? Is it good to drink a lot of coffee and tea? - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, January 4, 2022

தினம் ஒரு தகவல் காபி, டீ அதிகம் குடிப்பது நல்லதா? Is it good to drink a lot of coffee and tea?

காபி, டீ அதிகம் குடிப்பது நல்லதா? பலருக்கு ஒவ்வொரு நாளும் காபியுடன் தான் விடியும். அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்துக் காபி அல்லது டீ, வேலை இடைவேளையின்போது பதினோரு மணிவாக்கில் இன்னும் ஒரு டீ. மாலை தேநீர் இடைவேளை என்று சொல்லிக்கொண்டு ஒரு டீ. மாலை ஆறு மணிக்கு லேசாகத் தலைவலிக்கிறது என்ற விளக்கத்துடன் ஒரு டீ அல்லது ஸ்டிராங் காபி. 

ஒரு நாளில் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு முறையாவது இந்த பானங்களைப் பருகாதவர்கள் குறைவு. இப்படி அடிக்கடி காபி அல்லது டீ குடிப்பது நல்லதா? நாம் ஏன் அடிக்கடியோ அல்லது சோர்ந்து போகும்போதோ காபி அல்லது டீ குடிக்க நினைக்கிறோம்? காரணம் அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதன் காரணமாகவே காபி அல்லது டீ குடித்ததுமே நாம் உற்சாகமாக உணர்கிறோம்.

 தவிர, காபியில் காபீன் என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. இது ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு நாளுக்கு இரண்டு முறை டீயோ, காபியோ குடிப்பது உடல்நலத்துக்குப் பெரிதாகக் கேடு விளைவிக்காது. 

அப்படி குடிப்பதால் சில நன்மைகளும் ஏற்படலாம். காபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் சொல்கிறார்கள். மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தை காபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 

டீ குடிப்பதால் பார்கின்சன்ஸ், ருமட்டாய்டு ஆர்த்ரட்டிஸ் போன்றவை ஏற்படும் ஆபத்து ஓரளவுக்கு குறைகிறதாம். ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் டீ குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். 

ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும். புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளையும் டீ குடிப்பதால் குறையலாம் என்கிறார்கள். இவ்வளவு நன்மைகள் இருக்கும் பானங்களைக் குடிப்பதில் என்ன தவறு என்று யோசிக்கலாம். காபியில் இருக்கும் காபீன் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும்போது, அதுவே உடல்நலப் பாதிப்புக்கு காரணமாக அமைந்துவிடும். 

அளவுக்கு அதிகமாகக் காபி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து ரத்தசோகை ஏற்படலாம். இன்னும் சிலருக்கு சரியான நேரத்தில் காபி குடிக்கவில்லை என்றாலே பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான். எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீதான், எல்லை மீறும்போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன.

No comments:

Post a Comment