கற்பூரவள்ளி இலையில் உள்ள மருத்துவ நன்மைகள் என்னென்ன..? What are the medicinal benefits of camphor leaf? - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, January 18, 2022

கற்பூரவள்ளி இலையில் உள்ள மருத்துவ நன்மைகள் என்னென்ன..? What are the medicinal benefits of camphor leaf?

கற்பூரவள்ளி இலையில் உள்ள மருத்துவ நன்மைகள் என்னென்ன..? What are the medicinal benefits of camphor leaf? 

கற்பூரவள்ளியை பச்சையாக கூட சாப்பிடலாம். அவ்வளவு மருத்துவ குணம் நிறைந்தது. கற்பூரவள்ளி இலைகளை கசக்கி சாறு பிழிந்து சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும். 

கற்பூரவள்ளி இலைகளை அரைத்து அதன் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து உட்கொள்ளலாம். காசநோய், கபக்கட்டு, அம்மைக் கொப்புளம் ஆகியவைகளைக் கட்டுப்படுத்தும். கற்பூரவள்ளி இலைகளை தண்ணீரில் இட்டு ஆவி பிடித்தாலும் நெஞ்சு சளி குணமாகும். 

கற்பூரவள்ளி சூப் செய்ய: 5 இலைகள், 5 மிளகு, 1 வெற்றிலை கொதிக்க வைத்து அந்த நீரை 60 மில்லி லிட்டர் காலை, மாலை பருகலாம். குழந்தைகளுக்கு 20 மில்லி லிட்டர் வரை அருந்தி வர நுரையீரல் சளி, ஆஸ்துமா, காசநோய், நாள்பட்ட சளி குணமாகும். 

 கற்பூரவள்ளி இலைகளின் சாற்றை நன்கு சுண்டக்காய்ச்சி அதில் பாதியளவை நன்கு வடிகட்டி அருந்தி வந்தால் புகைப்பிடிப்பதால் நுரையீரலில் தங்கியிருக்கும் நச்சுகள், மாசுகள் நீங்கும். இலைகளை கசக்கி அதன் துளிகளை உள்ளுக்கு அருந்துவதாலும் நெஞ்சு, கழுத்து மற்றும் நெற்றி பகுதிகளில் கற்பூரவள்ளிஇலைகளை நன்கு கசக்கி சூடு பறக்க தேய்த்து கொள்வதாலும் ஜுரம் சீக்கிரம் நீங்கும். 

செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது. நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, செரி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. கற் பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

What are the medicinal benefits of camphor leaf? What are the medicinal benefits of camphor leaf? 

Camphor can also be eaten raw. So full of medicinal quality. Squeeze the juice of camphor leaves and add a little essential oil and apply it on the forehead to cure headaches. You can grind camphor leaves and mix a little honey with its juice. 

Controls tuberculosis, measles and mumps. Chest cold can be cured by soaking camphor leaves in water. To make camphor soup: Boil 5 leaves, 5 peppercorns, 1 betel leaf and drink 60 ml of water in the morning and evening. Children can drink up to 20 ml to cure pneumonia, asthma, tuberculosis and chronic colds. Roast the juice of camphor leaves well and filter half of it well. If you smoke, the toxins and pollutants that stay in the lungs will be removed. 

Squeeze the leaves and inhale its drops and rub the camphor leaves well on the chest, neck and forehead to get rid of the fever quickly. The leaves of the plant are highly diuretic. It dissolves excess salts in the kidneys and protects the well-being of the kidneys. Some microbial infections on the surface skin of our body cause eczema, itching, etc. Peel a squash, grate it and squeeze the juice. Leave it on the affected area.

No comments:

Post a Comment