ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2021-2022 - பள்ளி மேலாண்மைக்குழு – மறுகட்டமைப்பு செய்தல் மற்றும் திறம்பட செயல்படுத்துதல் - இல்லம் தேடிக் கல்வித் திட்டத் தன்னார்வலர்களை ஈடுபடுத்துதல் - வழிகாட்டுதல் பயிற்சிகள் நடத்துதல் - சார்பு.
மாநிலதிட்ட இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
ந.க.எண்.449/C7/பகுமே/ஒபக/2021-2, நாள். .02.2022
பொருள்:
ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி 2021-2022 - பள்ளி
மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு செய்தல் மற்றும்
திறம்பட செயல்படுத்துதல் - இல்லம் தேடிக் கல்வித்
திட்டத் தன்னார்வலர்களை ஈடுபடுத்துதல் -வழிகாட்டுதல்
பயிற்சிகள் நடத்துதல்- சார்பு.
2009-யில் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் 6 முதல் 14
வயது வரையிலான குழந்தைகள் அனைவருக்கும் இலவசக் கட்டாயக்
கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. பள்ளிகளின் அன்றாடச்
செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் அனைத்துக் குழந்தைகளுக்கும்
தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் பள்ளி
வளர்ச்சித் திட்டம் தயாரித்து செயல்படுத்தவும் அனைத்து அரசு பள்ளிகளில்
பள்ளி மேலாண்மைக் குழுவை அமைப்பதை கல்வி உரிமைச் சட்டம்
கட்டாயமாக்கியுள்ளது.
பள்ளி மேலாண்மைக் குழுவை மறு சீரமைப்பு செய்து திறம்படச்
செயல்படுத்துவதற்காக முதன்மைப் பயிற்றுனர்களுக்கும், (MASTER
TRAINERS) மாவட்ட கருத்தாளர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் 1.70 இலட்சம்
தன்னார்வலர்கள் மூலம் இல்லம் தேடிக் கல்வித் திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளி மேலாண்மைக் குழுக்களை
மறுசீரமைப்பு செய்வதற்கு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வும்,
பெற்றோர்களை பள்ளியில் நடைபெறும் விழிப்புணர்வு மற்றும் மறு
சீரமைப்பு நடைபெறும் நாட்களில்
பள்ளிக்கு அழைத்து வர
தன்னார்வலர்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைக் கவனத்தில் கொண்டு பள்ளி மேலாண்மைக் குழுச்
செயல்பாடுகளைப் பற்றிய புரிதலை தன்னார்வலர்களுக்கு
உருவாக்குவதற்கான வழிகாட்டுதல் பயிற்சிகளை நடத்தத்
திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment