தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் சென்னை-6
ந.க.எண்.25154/01/இ2/2021 நாள் 23.02.2022
பொருள்:
பள்ளிக் கல்வி 2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள்
பொதுமாறுதல் சார்பான கலந்தாய்வு நடைபெறுதல்
ஆணை பெற்றவர்கள் பணியில் சேர அறிவுரை வழங்குதல்
சார்பு.
பார்வை:
1)அரசாணை (நிலை) எண்.176 பள்ளிக் கல்வி (பக5(1)
துறை நாள்.17.12.2021
2)பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் இதே
எண்ணிட்ட நாள்.30.12.2021,06.1.2022,07.1.2022
8.1.2022, 10.1.2022, 20.1.2022,21.1.2022, 22.1.2022
மற்றும் 24.1.2022,28.1.2022, 7.2.2022மற்றும்
10.02.2022
3)சென்னை-6 தொடக்கக் கல்வி இயக்குநரின் கடிதம்
ந.க.எண்.756/01/2021 நாள்.22.2.2022
பார்வை-1ல் காணும் அரசாணையின்படி 2021-22ம் கல்வியாண்டிற்கு
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்
கலந்தாய்வு நெறிமுறைகள் சார்பாக ஆணை வெளியிடப்பட்டு அனைத்து
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காண் அரசாணையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாறுதல்
கோரும் ஆசிரியர்கள் உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து கல்வி தகவல்
மேலாண்மை இணையத்தில் (EMIS Online) பதிவேற்றம் செய்துள்ளனர்.
அதனடிப்படையில் மேற்படி ஆசிரியர்களுக்கு மாறுதல்கள், பதவி உயர்வுகள்,
பணிநிரவல் சார்பான கால அட்டவணை வெளியிடப்பட்டு (பதவி வாரியாக)
கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
மேற்படி கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல்கள், பதவி உயர்வுகள்,
பணிநிரவல் ஆணைகள் பெற்ற அனைத்துவகை ஆசிரியர்களும் 24.2.2022 அன்று
பணியில் இருந்து விடுவிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்
திட்டம் (IFHRMS)ன்படி ஊதியம் பெற்று வழங்குவதில் உள்ள நடைமுறைச்
சிக்கல்களை தவிர்த்திடும் பொருட்டு மேற்படி கலந்தாய்வில் கலந்து கொண்டு உரிய
ஆணைகள் பெற்ற (மாறுதல்கள் / பதவி உயர்வுகள் / பணிநிரவல்கள்)
அனைத்துவகை ஆசிரியர்களையும் 28.02.2022பிற்பகல் விடுவித்து 01.03.2022
அன்று பணியில் சேரத்தக்க வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
ஆணையருக்காக
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
(மின்னஞ்சல் மூலமாக)
நகல்:
1.தொடக்கக் கல்வி இயக்குநர் சென்னை-6
2. இணை இயக்குநர்…
No comments:
Post a Comment