அம்பேத்கர் பள்ளி சென்ற நவம்பர் 7-ந்தேதியை நாடு முழுவதும் மாணவர் தினமாக கொண்டாட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
அம்பேத்கர் சொந்த ஊர்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக மராட்டியம் வந்து உள்ளார்.
நேற்று அவர் சட்ட மேதை அம்பேத்கரின் சொந்த ஊரான ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அம்பாதாவே கிராமத்திற்கு சென்றார். அங்கு ஜனாதிபதி, அம்பேத்கரின் அஸ்தி கலசத்திற்கு பூஜை செய்தார். மேலும் அம்பேத்கர், புத்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:-
மாணவர் தினம்
1900-ம் ஆண்டு அம்பேத்கர் பள்ளியில் சேர்ந்த நாளை நினைவுகூறும் வகையில் மராட்டியத்தில் நவம்பர் 7-ந்தேதி மாணவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.
அம்பாதாவே கிராமம் உத்வேகத்தின் நிலம் என கூற வேண்டும். இதுதான் முழு ஆற்றலுடன் பல்வேறு துறைகளில் மகத்தான பங்களிப்பை அளித்த அம்பேத்கருக்கு செய்யும் மரியாதை. ஒவ்வொரு கிராமத்திலும் அம்பேத்கர் கூறிய நல்லிணக்கம், இரக்கம், சமத்துவம் ஆகியவற்றால் ஆன சமூக அமைப்பு இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment