96 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நேரடி பணி நியமன கலந்தாய்வு 23-02-2022 அன்று நடைபெறவுள்ளது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, February 16, 2022

96 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நேரடி பணி நியமன கலந்தாய்வு 23-02-2022 அன்று நடைபெறவுள்ளது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06 நக.எண்.7754/71/2017 ,

பொருள் 

தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 97 வட்டாரக் கல்வி அலுவலர்கள் நேரடி நியமனம் - பணிநியமன கலந்தாய்வு EMIS மூலம் 23.022022 அன்று தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடத்தப்படவுள்ளது தெரிவாளர்களுக்கு கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைப்பு கடிதம் வழங்க தெரிவித்தல் - தொடர்பாக, 

1. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் கடிதம் நக.எண்.7754/ஐ1/2017, நாள்.19.06.2019 2.ஆசிரியர் தேர்வு வாரிய கடிதம் நக.எண்.7632/E3(S2)/2021, நாள்.09.02.2022 

பார்வை 1 இல் கண்டுள்ள இவ்வியக்கக கடிதத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தில் நேரடி நியமன ஒதுக்கீடு பணியிடங்களான 97 பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த பணிநாடுநர்களை தெரிவு செய்து அனுப்புமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்தை கேட்டுக்கொள்ளப்பட்டது. பார்வை 2 இல் கண்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கடிதத்தில் 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களில் 96 பணியிடங்களுக்கான பணிநாடுநர்களின் தற்காலிகத் தெரிவு பட்டியல் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் அடங்கிய Folders ஆகியவை இணைத்து பெறப்பட்டுள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 96 தேர்வாளர்களுக்கு 23.022022 அன்று பணிநியமன கலந்தாய்வு EMIS மூலம் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடத்தப்படவுள்ளது, 

இணைப்பில் உள்ள 96 தேர்வாளர்களில் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களை 23.02202 அன்று காலை 9:00 மணியளவில் தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும் பணிநியமன கலந்தாய்வில் கலந்துகொள்ள இணைப்பில் உள்ளவாறு அழைப்பு கடிதம் வழங்கி , அழைப்பு கடிதம் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் பெற்று கோப்புகளில் பராமரிக்க சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார். 

இணைப்பு அழைப்பு கடிதம் (Model)மற்றும் தெரிவாளர்களின் பட்டியல் ராணி தொடக்கக் கல்வி இயக்குநர் பிடி பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் நகல்-தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06 (தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது)

No comments:

Post a Comment