பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடைபெறும் நாளான வருகிற 19-ந்தேதி (நாளை மறுதினம்) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும் 18-ந்தேதி (நாளை) தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் தவிர, பிற ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும், 50 சதவீதத்துக்கு மேல் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் 18-ந்தேதியன்றும் விடுமுறை வழங்க சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment