தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6.
நக.எண். 756 / டி1 ! 2021,
நாள் :
1 02 / 2022
பொருள் :
தொடக்கக் கல்வி பொது மாறுதல் கலந்தாய்வு 2021-22
ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் - 28.02.2022 அன்று
விண்ணப்பங்களைப் பெற்று கலந்தாய்வு நடத்துதல்
ஒன்றியத்திற்குள் ! மாவட்டத்திற்குள் மாறுதல் ஆணை வழங்குதல்
மற்றும் விடுவித்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக
பார்வை :
1) சென்னை-6, தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,
ந.க.எண். 756/01/2021, நாள் : 05.022021 மற்றும் 06.01.2022
2) அரசாணை (நிலை) எண். 176, பள்ளிக் கல்வி (பக5(1)) துறை,
நாள்.17.12.2021
3) சென்னை-6, பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்,
ந.க.எண்.
25154/11/இ1/2021, நாள். 30.122021 மற்றும்
23.02.2022
பார்வையில் கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளைப் பின்பற்றி 2021-
2022ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் EMIS மூலம் பொது மாறுதல், பதவி
உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு பணிகள் 21.01.2022 முதல் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது
மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம்
தவிர்த்து பிற மாவட்டங்களில் மேற்படி அரசாணையின் வ.எண்.(G)-ல் தெரிவிக்கப்பட்டுள்ள
வழிகாட்டுதல்களை பின்பற்றி, ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை
28.022022 முற்பகல் பெற்று, பரிசீலனை செய்து அன்று பிற்பகல் ஒன்றியத்திற்குள் மற்றும்
மாவட்டத்திற்குள் மனமொத்த மாறுதல் ஆணைகள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், மனமொத்த மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் 28.022022
பிற்பகல் விடுவித்து 01.03.2022 அன்று பணியில் சேரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
தொடக்கக் கல்வி இயக்குநர்
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
(மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் மாவட்டங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் தவிர)
2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக)
3. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் (மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)
நகல் - அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, சென்னை-9
அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்படுகிறது.
நகல் - ஆணையர், பள்ளிக் கல்வி ஆணையரகம், சென்னை-6
அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்படுகிறது.
நகல் - மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-6
அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்படுகிறது
No comments:
Post a Comment