துளிர் கிட்சன் டிப்ஸ் சிவப்பு : அரிசி பொங்கல்
🍱 தேவையான பொருட்கள்:
1. சிவப்பு அரிசி - 1 கப்
2. பாசிப்பருப்பு - 1/4 கப்
3. எண்ணெய் - 2 கரண்டி
4. நெய் - 4 கரண்டி
5. மிளகு - 1 தேக்கரண்டி
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. முந்திரிப்பருப்பு - 15 எண்ணம்
8. இஞ்சி - சிறிய துண்டு
9. கறிவேப்பிலை - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
🍴 செய்முறை :
1. சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. பாசிப்பருப்பை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.
3. குக்கரில் ஊற வைத்த சிவப்பு அரிசி, வறுத்து வைத்த பாசிப்பருப்பு, மூன்று டம்ளர் ண்ணீர், உப்பு சேர்த்து நான்கு விசில் வைத்து இறக்கவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய், நெய் விட்டுக் காய்ந்ததும், அதில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, முந்திரிப்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும்.
5. தாளித்த பொருட்களை வேக வைத்து வைத்திருக்கும் அரிசி, பருப்புக் கலவையில் சேர்த்துக் கிளறிப் பின்னர் பரிமாறவும்.
🌷🌷
No comments:
Post a Comment