வீடுகளை வெப்பத்தில் இருந்து விடுபட வைக்கும் மரங்கள்
நம் முன்னோர்கள் இயற்கைக்கு ஒத்துப்போகும் வகையில் கட்டிடங்கள் கட்டினர். நம் பகுதிகளிலேயே கிடைக்கும் மரம், கல், களிமண், சுண்ணாம்பு போன்றவற்றை கட்டுமான பொருட்களாக பயன்படுத்தினார்கள்.
🌷அவைதான் முன்மாதிரியான பசுமை வீடுகள்.
இயல்பாகவே நம் முன்னோர்கள் உருவாக்கிய பசுமை இல்லம் இன்று புதிய தொழில் நுட்பமாகி இருக்கிறது.
🌷உலகம் முழுவதும் இயற்கைக்கு நெருக்கமான கட்டிடங்களைக் கட்ட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு நடந்துகொண்டிருக்கிறது.
ஒவ்வொரு பகுதியின் சுற்றுச்சூழலை உணர்ந்து அதற்கு ஈடுகொடுக்கும்படியான வீடுகளைக் கட்டி அவற்றில்தான் தங்கள் வாழ்வை நடத்திவந்தார்கள்.
🌷வீடுகளின் பல பகுதிகளை மரங்கள் ஆக்கிரமித்து இருந்தன.
கதவுகள், சன்னல்கள், வீட்டின் கூரைகள், வீட்டைப் பிரிக்க மரத்தடுப்புகள் எனப் பெரும்பாலான பயன்பாட்டுக்கு மரங்கள் உதவின.
மரப்பலகைகள் வெப்பத்தை கடத்தாது, அதைத்தடுத்து நிறுத்திவிடும்.
எனவே அதிகமான வெயிலின் காரணமாக வெளியே வெப்பம் அதிகமாக இருந்தாலும்கூட வீட்டுக்குள் நுழைந்துவிட்டால், உள்பகுதி குளுமையாக இருக்கும்.
🌷அதே போல் குளிர்காலத்தில் வீட்டின் வெளியே கடுமையான குளிர் நிலவும்போதும் வீட்டுக்குள் பெரிய அளவில் குளிர் தெரியாது. ஓரளவு கதகதப்பாகவே வீட்டின் தட்பவெப்பம் இருக்கும்.
🌷ஆனால், இப்போது நமது இல்லங்களின் கட்டமைப்பு முற்றிலும் மாறிவிட்டது. நவீன கட்டுமானப் பொருட்களும் பெருகிவிட்டன.. மரங்களின் பயன்பாட்டை மிகவும் குறைத்துவிட்டோம்.
🌷நவீன வீடுகளின் உருவாக்கத்தில் சில வசதிகளைப் பெற்றுள்ளோம் என்றாலும் வெப்பத்திலிருந்து விடுதலை தர உதவும் மரத்தை மறந்துவிட்டோம். நவீன வீடுகளை மரங்கள் சூழ்ந்த பகுதிகளுக்கு மத்தியில் அமைத்தாலும், நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.
No comments:
Post a Comment