13-ம் நூற்றாண்டில் இருந்தே கோலாபுரி செருப்புகள் பிரபலம். கபாஷி, பேடான், கச்காடி, பக்கல்நாளி, புகாரி என்று இதற்கு பல பெயர்கள் உள்ளன. இவை அனைத்தும் அந்தந்த கிராமங்களில் இருந்து தயாரிக்கப்படுபவை.
பின்னாளில் இவை ஒருங்கிணைக்கப்பட்டு கோலாபுரி செருப்புகள் என பிரபலமானது.
1920-களின் தொடக்கத்தில் சாதுகர் என்ற வம்சத்தினர் இந்த செருப்புக்கான வடிவமைப்பை உருவாக்கினர். அழகிய மேல் வடிவமைப்போடு உருவாக்கிய இந்த செருப்புக்கு கன்வாலி என பெயரிட்டனர்.
அதிகரித்த தேவையால் இத்தகைய செருப்பு தயாரிக்கும் தொழிலை பிறருக்கு கற்றுத்தந்து பிரபலப்படுத்தினர். கொல்கத்தாவில் இருந்து இத்தகைய செருப்புகளுக்கு அதிக எண்ணிக்கையில் ஆர்டர் கிடைத்ததை தொடர்ந்து இவை மேலும் பிரபலமானது.
இப்போது மூலப்ெபாருள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே இத்தகைய செருப்புகளை தயாரித்து வந்தவர்கள், இப்போது இந்த தொழிலை நிறுத்திவிட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர்.
இந்தியாவில் கோலாபுரி செருப்பு தயாரிப்பு மூலமான வருமானம் ரூ.25 கோடியில் இருந்து ரூ.6 கோடியாக சரிந்துவிட்டதாக இந்த துறையில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். எனவே இந்த தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment