இந்தியன் வங்கி சார்பில் 202 பாதுகாவலர் (செக்யூரிட்டி கார்டு) பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் ராணுவம், கடற்படை, விமானப்படையில் பணிபுரிந்த முன்னாள் படைவீரர்களாக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியுடன் உயர் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
மேலும் விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியில் பேச, படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். 26 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆன்லைன் எழுத்து தேர்வு, உள்ளூர் மொழி தேர்வு, உடல் தகுதி திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-3-2022. மேலும் விரிவான விவரங்களை https://www.indianbank.in/career/#! என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment