DGE PROCEEDINGS முதல் திருப்புதல் தேர்வுகள் - 10.02.2022 அன்று நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் குறித்த அறிவுரைகள் - தொடர்பாக - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, February 8, 2022

DGE PROCEEDINGS முதல் திருப்புதல் தேர்வுகள் - 10.02.2022 அன்று நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் குறித்த அறிவுரைகள் - தொடர்பாக

அனுப்புநர்

சா.சேதுராமவர்மா,
அரசுத் தேர்வுகள் இயக்குநர்,
சென்னை - 600 006.

பெறுநர்

அனைத்து முதன்மைக் கல்வி
அலுவலர்கள் மற்றும்
இணை இயக்குநர்(கல்வி), பாண்டிச்சேரி.

நாள். 08.02.2022
ந.க.எண். 026826 / எச்.1/2021


ஐயா / அம்மையீர்,


பொருள் : 

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 - 2021-2022-ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் - 10.02.2022 அன்று நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் குறித்த அறிவுரைகள் - தொடர்பாக.


பார்வை : 

1. இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம், நாள்:28.12.2021.
2. இதே எண்ணிட்ட செய்திக்குறிப்பு , நாள்.31.01.2022.
3. இவ்வலுவலக கடித ந.க.எண்.12/மந்தணம்/2021, நாள்.29.12.2021.
4. இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம், நாள்: 31.01.2022.


2021-2022-ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு /
மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் முறையே 09.02.2022 முதல் 15.02.2022 மற்றும் 09.02.2022 முதல் 16.02.2022 வரை நடைபெறுமெஏற்கனவே பார்வையில் 4-இல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 10.02.2022 (வியாழக்கிழமை) அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் அன்றைய தினம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலப் பாடத் திருப்புதல் தேர்வு 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது..




No comments:

Post a Comment