🍱 தேவையானவை:
ஓட்ஸ் - ஒரு கப், வெங்காயம், உருளைக்கிழங்கு (சின்னது) - தலா ஒன்று, பச்சைப் பட்டாணி, கேரட் (துருவியது), குடமிளகாய் (நறுக்கியது) - தலா அரை கப், பிரவுன் பிரெட் ஸ்லைஸ் - 2, தனியாத்துள், சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
🍴 செய்முறை:
ஓட்ஸை மிக்ஸியில் பொடி செய்யவும். பிரெட்டையும் பொடி செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். அது வதங்கியதும் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, குடமிளகாய், கேரட், பச்சைப் பட்டாணி, சேர்த்து மூடி வைத்து, பிறகு மேலும் வதக்கவும். காய்கள் வெந்ததும் நன்றாக மசித்து, அதனுடன் பிரெட் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து... ஓட்ஸ் பொடியில் நன்றாக இரண்டு பக்கமும் புரட்டி, உருண்டைகளாக்கி, தட்டி தவாவில் போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
🌷🌷
No comments:
Post a Comment