ச‌த்துமாவு‌‌க் க‌‌ஞ்‌சி செய்வது எப்படி? - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, March 22, 2022

ச‌த்துமாவு‌‌க் க‌‌ஞ்‌சி செய்வது எப்படி?

ச‌த்துமாவு‌‌க் க‌‌ஞ்‌சி 
 


🍱 தேவையானவை: 

பார்லி, கோதுமை, சோளம் தலா - 100 ‌கிரா‌ம்
தினை, கம்பு, கேழ்வரகு - 100 ‌கிரா‌ம்
பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு - 20
சோயா, கொள்ளு - தலா 100 ‌கிரா‌ம்
பால் - ஒரு டம்ளர்
வெல்லம் - தேவையான அளவு.

🍴 செய்முறை: 

பார்லி, கோதுமை, சோளம், தினை, கம்பு, கேழ்வரகு, பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, கொள்ளு, சோயா எல்லாவற்றையும் தனித்தனியாக சுத்தம் செய்து கொள்ளவும். வெறும் கடாயில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

ஒருவரு‌க்கு 4 தே‌க்கர‌ண்டி மாவை ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் போட்டு 2 டம்ளர் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி க‌ட்டி‌யி‌ல்லாம‌ல் ந‌ன்கு கரை‌த்து‌க் கொள்ளவு‌ம். 

பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிகொண்டே இருக்கவும். ஈரக் கையில் கஞ்சியைத் தொடும்போது கையில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும் இறக்கவும். பின்பு, கொதிக்க வைத்து ஆறிய பால், பொடித்த வெல்லம் சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.

இ‌ந்த க‌‌ஞ்‌சியை குழ‌ந்தைக‌ள் முத‌ல் பெ‌ரியவ‌ர்க‌ள் வரை யா‌ர் வே‌ண்டுமானாலு‌ம் அரு‌ந்தலா‌ம். உடலு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது.

🌷🌷

No comments:

Post a Comment