பணிநிரவலில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் நாளை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்து கொள்ள அனுமதி!!!
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்
சென்னை 6
ந.க.எண்.040678/C3/இ12021 நாள்.15.03.2022
பொருள்:
பள்ளிக் கல்வி- 2021-22ம் ஆண்டிற்கான
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு
நடைபெறுதல் -பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து
கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் வெளிமாவட்ட
மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதித்தல்
சார்பு.
பார்வை:
1) சென்னை-6 பள்ளிக் கல்வி ஆணையரக இணை
இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்
ந.க.எண்.040678/23/இ1/2021 நாள்.4.8.2021,2.9.21
2.11.2021,12.11.2021,19.11.2021,28.1.2022, 9.3.2022
மற்றும் 14.3.2022
2)தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
ந.க.எண்.25154/01/இ2/2021 நாள்.30.12.2021
-0-
பார்வை-2ல் காணும் செயல்முறைக்கிணங்க நடப்புக் கல்வியாண்டில்
(2021-22) ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள், பதவி உயர்வுகள், பணிநிரவல்கள்
சார்பான அரசாணை மற்றும் அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்காண் அரசாணையின் வழிகாட்டுதலின்படியும் அனைத்துவகை
ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல்கள், பதவி உயர்வுகள், பணிநிரவல் கலந்தாய்வுகள்
ஆகியன உரிய காலஅட்டவணைப்படி நடைபெற்று வருகிறது.
/
மேற்காண் காலஅட்டவணைப்படி அரசு உயர்நிலை மேல்நிலைப்
பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு (உபரியாக இருந்த) 14.3.2022 அன்று
பணிநிரவல் மூலம் கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது.
மேற்படி பணிநிரவல்
கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றவர்கள் 16.03.2022 அன்று
நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட (Inter
IDist.Transfer Counsclling) பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து
கொள்ள
அனுமதிக்கலாம்.
மேலும், மேற்படி மாவட்டம் விட்டு மாவட்ட பொதுமாறுதல் கலந்தாய்வில்
கலந்து கொண்டு சார்ந்த ஆசிரியர் கோரும் மாவட்டத்திற்கு உரிய இடத்தை தெரிவு
செய்யப்படாத பட்சத்தில் (மாவட்ட மாறுதல் ஆணை பெறாத பட்சம்) அவர்கள் ஏற்கனவே
பணிநிரவல் கலந்தாய்வில் தெரிவு செய்யப்பட்ட பள்ளியிலேயே சேர அனுமதித்தல்
வேண்டும்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு
தெரிவிக்கலாகிறது.
No comments:
Post a Comment