உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக்க சில டிப்ஸ் !! - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, April 22, 2022

உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக்க சில டிப்ஸ் !!

உடல் சூடு இருந்தால் பல்வேறு நோய்கள்தாக்கும் அபாயம் இருக்கிறது. பல்வேறுஉடல்நல பிரச்னைகளுக்கு நம் உடல் சூடும் ஒரு காரணம். உடலின் வெப்பநிலையைக் குறைக்க தண்ணீர் குடிப்பது உதவும்.


வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி, முலாம் பழம், நுங்கு ஆகியவை உடலைக்
குளிர்ச்சியாக்கும். இளநீரைக் குடித்து வந்தாலும் வெப்பநிலை குறையும்.
சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, அதை இளநீரில் அல்லது பாலில் அல்லது பழச்சாறுகளில் அல்லது அப்படியே வெறுமனே குடிக்கலாம். உடலின் வெப்பம் தணியும்.

தினமும் 2 டம்ளர் நீர்மோரை காலை 11 மணி அல்லது மாலை 4 மணி அளவில் குடித்து வந்தால் உடலின் வெப்பநிலை சரியாக இருக்கும். 2 ஸ்பூன் வெந்தயத்தை முன்னாள் இரவேதண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயம் அந்தத் தண்ணீரையும் சேர்த்துக் குடிக்கலாம். விருப்பப்பட்டால் சிறிது மோருடன் கலந்து குடிக்கலாம்.

புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌ சௌ, முள்ளங்கி, கேரட் ஆகியவை உடலுக்குக் குளிர்ச்சி தரும். சந்தன கட்டை சிறிதளவு கிடைத்தால், அதைத் தினமும் இழைத்து முகத்தில் உடலில் பூசி குளித்தால் உடல் சூட்டை நீக்கும்.

கற்றாழையை சுத்தப்படுத்தி, அதன் சதைப் பகுதியை நன்கு கழுவ வேண்டும். பனைவெல்லம் கலந்து அரைத்துக் குடித்தால், உடல் குளிர்ச்சியாகும். வெறும் வயிற்றில் குடிப்பது மிக்க நல்லது.


🌷🌷

No comments:

Post a Comment