தினம் ஒரு தகவல் முதுமையிலும் சுறுசுறுப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, April 4, 2022

தினம் ஒரு தகவல் முதுமையிலும் சுறுசுறுப்பு

முதுமை வந்தாலே வாழ்க்கை பிடிப்பு இல்லாமல் போய்விடும். எதிலும் மனம் லயிக்காது. சோம்பல் தானாக வந்து ஆக்கிரமித்து கொள்ளும். முதுமையிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி? என்று ஒரு ஆய்வு நடத்தினார்கள். 


அதன்படி பீட்ரூட் ஜூஸ் பருகினால் முதுமையையும் சுறுசுறுப்பாக மாற்றமுடியும் என்று தெரிவிக்கிறார்கள். மனிதனுக்கு தேவையான ஆக்சிஜன் அளவை நைட்ரேட் என்கிற சத்து வெகுவாக குறைப்பதாக ஏற்கனவே நடத்தப்பட்ட பல ஆய்வுகள் மூலம் தெரியவந்தது. பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. 


இதனால் பீட்ரூட் சாப்பிடும்போது நைட்ேரட்டை உருவாக்குவதற்கான ஆக்சிஜன் தேவைப்படாது. வாரத்துக்கு 6 நாட்கள் பீட்ரூட் ஜூஸ் அருந்தினால் மிகவும் ஆரோக்கியமும் சோம்பல் இல்லாமலும் இருக்கும் என்று பிரிட்டன் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். 
இதன் தலைவர் விஞ்ஞானி கேட்டி வான்லி, "முதியவர்கள் சிறிய வேலைகளை செய்தாலும் அவர்கள் மிகுந்த சோர்வடைந்து விடுகிறார்கள். 


வயதாகும்போது அவர்களின் உடலில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கி விடும் என்பதுதான் இதற்கு காரணம் இதனால் திசுக்களுக்கு போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் உடல் சோர்வடைந்து விடும். எனவே, ஆய்வில் கலந்து கொண்ட முதியவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை குறைப்பதற்காக பீட்ரூட் ஜூஸ் கொடுக்கப்பட்டது. பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் சத்து, அவர்களின் ரத்த நாளத்தை விரிவடைய செய்தது. 


ரத்த ஓட்டம் எளிமையாக நடந்தால் திசுக்களுக்கு வழக்கமாக தேவைப்படும் ஆக்சிஜன் அளவு 12 சதவீதம் குறைந்தது. அவர்கள் உடற்பயிற்சி நடைப்பயிற்சி செய்தாலும் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக இருந்தார்கள்" என்றார். அதேநேரம் பீட்ரூட் ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களின் உடல்நிலையை பொறுத்து செயல்படக்கூடியது. அதனால் முதியவர்கள் தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அதன்பின் அருந்துவது நல்லது.

No comments:

Post a Comment