அகத்தி கீரையின் அற்புத பயன்கள் 🌿
மருத்துவ குணங்ககள் நிறைந்த கீரைகளில் முதன்மையாக பார்க்கப்படுவது அகத்திக் கீரை.
சத்துக்கள் 🌿
அகத்திக் கீரையில்
நீர்ச்சத்து 73 சதவீதம்,
புரதச்சத்து 8.4 சதவீதம்,
கொழுப்பு 1.4 சதவீதம்,
தாது உப்புக்கள் 2.1சதவீதம்,
நார்ச்சத்து 2.2 சதவீதம்,
மாவுச்சத்து 11.8 சதவீதம் உள்ளன.
மேலும்
சுண்ணாம்புச்சத்து, இக்கீரையில் அதிக அளவில் உள்ளதால்,
இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
இக்கீரையில் உயிர்ச்சத்துக்கள் நிறைய உள்ளது.
வைட்டமின் ஏ 100கி,
9000 கலோரிகள் உள்ளது.
அதேபோல் தயாமின் சத்து 0.21 மி.கி அளவும்,
ரைபோப்ளேவின் 0.09 மி.கி அளவும்,
வைட்டமின் சி 169 மி.கி அளவும் அகத்திக் கீரையில் உள்ளன.
அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன.
மருத்துவப் பயன்கள் 🌿
அகத்திக் கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன் படுத்தும்
குடல்புண், அரிப்பு, சொறி சிரங்கு முதலிய தோல் நோய்களை அகத்திக் கீரை குணமாக்கும்
தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலிக்கு அகத்திக் கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும்
ரத்தப் பித்தம், ரத்த கொதிப்பு ஆகியவை அகத்திக்கீரையை உண்பதால் அகலும்
ரைபோப்ளேவின் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு ஏற்படும்
தலைவலியை அகத்திக் கீரையை எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்
ஆண் மலட்டு தன்மை, விந்தணுக்கள் குறைபாடு போன்றவைகளுக்கு அகத்திக் கீரை நல்ல தீர்வு தரும்
அகத்தியில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால்
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு
, சிறுநீரும் தடை இல்லாமல் செல்லவழி வகுக்கும்
அகத்திக் கீரை வேர் மூட்டு வலிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது
இந்த கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
இது இருதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது
அகத்திக் கீரை வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கிறது
மற்றும் இது ரத்த குழாய்கள் தடிமன் ஆவதை தடுத்து நிறுத்துகிறது
அகத்திக் கீரை நுண்கிருமிகள் வளர்வதை தடுத்து நிறுத்துகிறது.
எச்.ஐ.வி. போன்ற உயிர் கொல்லி கிருமிகளையும் தடுக்கிறது.
நோய் தொற்று உள்ளவர்கள்,
அந்த கிருமி தொற்று இருப்பவர்களுக்கு அதன் வளர்ச்சி தடுக்கப்படுகிறது
அகத்தி கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும்.
இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும்
அகத்திக் கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும்
அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாற்றோடு - அதே அளவு தேன் கலந்து உண்டு வர வயிற்று வலி நீங்கும்
அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து,
அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து,
கரும்பட்டை, தேமல், சொரி, சிரங்கு உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்
இன்றைய இயந்திர வாழ்க்கையில்
சிறுவர்கள் முதல் பெரியர்வகள் வரை அனைவரும் கணினி , கைப்பேசி போன்றவற்றை
ஒரே இடத்தில அமர்ந்து பயன்படுத்துவதால் கண்களில் வறட்சி ஏற்படும் .
இதனை சரி செய்ய அகத்தியை பயன்படுத்தி வர கண்கள் குளிர்ச்சி அடையும் பார்வை தெளிவாகும்
அகத்தியானது உடல் சூட்டை குறைப்பதோடு,
உடல் சூட்டினால் ஏற்படக் கூடிய குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது
அழகு பயன்கள் 🌿
பொலிவிழந்த தோலிற்கு கருவளையங்கள் நிறைந்த முகத்திற்கு அகத்தி ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.
ரத்த சோகையை நீக்கு கிறது.
பிராணவாயு சரியாக செல்லாததால் தோல் பொலிவிழந்து காணப்படும்.
இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளுதல் தோலுக்கு நல்ல நிறத்தை தருகிறது
அகத்தி கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணிநேரம் வைத்திருந்து குளித்தால் உடல் சூடு குறையும் மற்றும் இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்
அகத்திக்கீரை, மருதாணி இலை மற்றும் மஞ்சள் மூன்றை யும் சமஅளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்
அகத்தி கீரையுடன் சிறிது மஞ்சள், அகத்தி இலை மற்றும் மருதாணி இலை இவை அனைத்தும் ஒரு சேர அரைத்து
பித்த வெடிப்பு உள்ள இடத்தில தடவி வந்தால் பித்த வெடிப்பு இருந்த இடம் காணாமல் போகும்
வயதானவர்களுக்கு 🌿
இதில் வைட்டமின்- சி (Vitamin-C) உள்ளதால் ,
நோய் எதிர்ப்பு (Immunity) சக்தி அதிக அளவில் உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி அனைவருக்கும் தேவை என்றாலும்
முதியர்வர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும் .
எனவே அவர்கள் இக்கீரையை எடுத்துக் கொள்வதன் மூலம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.
பெண்களுக்கு 🌿
அகத்திக் கீரையில், இரும்பு சத்து அதிகம் இருப்பதால்
இரத்த ஒட்டத்தை சீராக வைக்க உதவும்.
கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் இரும்பு சத்து தேவைப்படுவதால்
இந்த கீரையை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் பால் ஊட்டும் தாய்மார்களும் இதனை எடுத்துக் கொள்வதனால்
பால் சுரப்பி தூண்டப்பட்டு அதிக அளவில் பால் சுரக்கும்.
குறிப்பு 🌿
அகத்திக் கீரையை அதிகமாக எடுத்து கொண்டால்
இரத்தம் கெட்டு போக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
இந்த கீரையை மற்ற மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பொழுது சாப்பிடக் கூடாது.
ஏனெனில் பிற மருந்தின் வீரியத்தை இது குறைத்து விடும்
வாயு கோளாறுகள் உள்ளவர்கள் அகத்தி கீரையை தவிர்ப்பது நல்லது
🌿 🌿 🌿
No comments:
Post a Comment