உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சமச்சீரான ஊட்டச்சத்து உணவை சாப்பிட வேண்டும்.
பச்சை காய்கறிகள், புரக்கோலி போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆப்ரிகாட் உலர் பழத்தை நாள்தோறும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஏழு ஆப்ரிகாட் சாப்பிட்டால் புற்றுநோய் ஆபத்திலிருந்து விடுபடலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வைட்டமின் சி-யை அதிக அளவில் உட்கொள்வதால், ஆறு ஆண்டுகள் வரை ஆயுளை நீட்டிக்க வாய்ப்பு உண்டு. வைட்டமின் சி-யை உணவுடன் எடுத்துக் கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைவு. பெண்களுக்கு 40 சதவீதம் மாரடைப்பு வாய்ப்பு குறைகிறது. ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம் வைட்டமின்-சி, நம் உடலுக்குப் போதும். நம் ஊரில் சாதாரணமாகக் கிடைக்கும் பெரு நெல்லிக்காயில் வைட்டமின்-சி சத்து அதிகம் உள்ளது.
மேலும் தினசரி 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள் உள்ளிட்ட நல்ல பலன்கள் கிடைக்கின்றன. ஆனால், 45 நிமிடங்கள் உடற்பயிற்சி என்பது அதிகபட்ச ஆரோக்கிய பலன்களை அளிக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
1900-ம் ஆண்டு வரை உலக அளவில் சராசரி மனித ஆயுட்காலம் 49 ஆண்டுகளாகவே இருந்தது. தற்போது 79 வயதாக சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment