தினம் ஒரு தகவல் வெயில் தரும் ஆரோக்கியம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, May 5, 2022

தினம் ஒரு தகவல் வெயில் தரும் ஆரோக்கியம்

தினம் ஒரு தகவல் வெயில் தரும் ஆரோக்கியம் 

நம் நாடு ஒரு வெப்பமண்டல நாடாக இருந்தாலும், சூரிய ஒளியை உடலுக்குள் அனுப்புவதை ‘அபார்ட்மெண்ட்’ வீடுகள் தடுக்கின்றன. ெபாதுவாகவே சூரிய ஒளியில் நனைந்து அதன் பலன்களைப் பெற, காலை நேரமாக இருந்தால் 7 மணிக்கு முன்னும், மாலை நேரமாக இருந்தால் 4 மணிக்குப் பின்னாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். காலை 7 மணிக்கு மேல் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, நம் தோலில் பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமன்றி தலைவலி, சோம்பல் போன்றவற்றையும் உண்டாக்கலாம். 

வெயிலில் காய்வதால் வாத நோய்கள் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம். இதை நிரூபிக்கும் வகையில் உடலில் ஏற்படும் வலியை குறைக்க சூரியக்குளியல் உதவுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது, மேற்கத்திய ஆய்வு ஒன்று. தேவையான அளவு சூரிய ஒளி நம் உடலில் படுவதால், எந்தச் செலவும் இல்லாமல், நம் உடலில் தோலுக்கு அடியில் மறைந்திருக்கும் புரோ-வைட்டமின் ‘டி’ என்பது, வைட்டமின்-டி ஆக மாற்றப்படுகிறது. இப்படி இயற்கை வரப்பிரசாதமாக கிடைத்த வைட்டமின் டி, உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதை அதிகப்படுத்தி, எலும்புகளை பலப்படுத்தி, தசைகளை வலிமைப்படுத்துகிறது. 

தோலின் அடியில் உள்ள கொழுப்பு சூரிய ஒளியால் எரிக்கப்படுகிறது. சூரியனால் கிடைத்த வைட்டமின்-டி, உடலில் சேர்ந்த அதீதக் கொழுப்பைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியோடு சேர்த்து சூரியனையும் நம்பலாம். நீர்நிலைகளில் இருக்கும் கிருமிகளை, இயற்கையான சூரிய ஒளி அழிப்பதுபோல, உடலில் உள்ள சில கிருமிகளையும் சூரிய ஒளி அழித்து உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மருத்துவ வளர்ச்சி அவ்வளவாக இல்லாத கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தொற்றுநோய்களின் ஆதிக்கத்தைத் தடுக்க இம்முறை பயன்படுத்தப்பட்டு உள்ளது. 

உடலில் `செரடோனின்’ எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து, ‘டிப்ரஷன்’ எனும் மனம் சோர்வுறுவதை சூரிய ஒளி தடுக்கிறது. அத்துடன் ரத்தக் குழாய்களில் நைட்ரிக் ஆக்சைடு வெளிப்படுத்தப்பட்டு, உயர் ரத்தஅழுத்தமும் குறைகிறது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாப்பது மட்டுமன்றி, வேறு சில புற்றுநோய்கள் வராமலும் தடுக்கிறது. எனவே ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுபவர்கள், தினமும் சூரிய ஒளி படும்படி ஜாலியாக ஒரு நடைபயிற்சி சென்றுவந்தால் போதும் என்கிறது, சமீபத்திய ஆய்வு முடிவுகள்.

No comments:

Post a Comment