உப்பு தண்ணியில வாய் கொப்பளித்தால் நல்லது ஏன் தெரியுமா? - - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, May 9, 2022

உப்பு தண்ணியில வாய் கொப்பளித்தால் நல்லது ஏன் தெரியுமா? -

 ஈறு வீக்கம்
பல்லின் இடுக்குகளில் மாட்டி கொள்ளும் உணவுத் துகள்கள் பாக்டீரியா பெருக்கத்திற்கு காரணமாக அமைகிறது. அப்படியே பாக்டீரியாவின் காலணியை பெருக்கி ஈறுகளில் படிக்க போன்ற அமைப்பை ஏற்படுத்தி விடும். இதனால் ஈறுகளில் வீக்கம், வலி போன்றவை ஏற்படும். இந்த பிரச்சினை எல்லாப் உப்பு கலந்த நீரைக் கொண்டு கொப்பளித்தாலே சரியாகி விடும்.

வாய்ப் புண்கள்

சில சமயங்களில் உதட்டின் உட்புறத்தில் அல்சர் போன்று புண்கள் ஏற்படும். இத் பொதுவாக தெரியாம உதட்டை கடித்து விடுதல், சில வகை உணவுகள், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் போன்றவற்றால் ஏற்படும். எனவே உங்கள் வாயை உப்பு கலந்த நீரில் கொப்பளிக்கும் போது சீக்கிரம் புண்கள் ஆறி விடும்.

பல்வலி நிவாரணம்

உங்கள் பற்களில் ஏற்பட்டுள்ள பற்சொத்தை காரணமாக சில சமயங்களில் வலி ஏற்படும். இந்த வலி தாங்கிக் கொள்ள முடியாத அளவு இருக்கும். அந்த மாதிரியான சமயங்களில் இந்த உப்பு கலந்த நீர் அந்த பல் வலியை குறைக்க உதவுகிறது.

பல் எனாமல்

உப்பு கலந்த நீரில் உள்ள ப்ளோராய்டுகள் பற்களில் உள்ள எனாமல் தேயாமல் காக்கிறது. எனவே இதை உங்கள் பற்கள் பராமரிப்பில் சேர்த்து கொண்டு வந்தால் என்றென்றும் உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

ஈறுகளில் காயங்கள்

தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் தகவலானது உப்பு கலந்த நீரைக் கொப்பளித்து வந்தால் ஈறுகளிலுள்ள இணைப்புத் திசுக்களில் ஏற்பட்டுள்ள காயங்கள் ஆறும் என்று அவர்கள் கூறிகின்றனர். இதன் மூலம் ஈறுகள் மறுபடியும் பழைய நிலையை அடையும் என்கின்றனர்.

வாய் வெண் புண்கள்

இந்த வெண் புண்கள் பூஞ்சை தொற்றால் நாக்கில் ஏற்படுகிறது. ஈஸ்ட் கேண்டியா என்ற பூஞ்சை தான் இதற்கு காரணமாக அமைகிறது. வெள்ளை நிறத்தில் நாக்கில் படலத்தை ஏற்படுத்தும். வீக்கம் வலி ஏற்படும். இதற்கு உப்பு கலந்த நீரைக் கொண்டு கொப்பளிக்கும் போது வெண் புண்கள் குணமாகுகிறது.

வாயை சுத்தமாக்குதல்

உப்பு கலந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளிக்கும் போது வாயின் pH அளவு சரியாகிறது. இதனால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றை தடுக்கலாம். பல் இடுக்குகளில் மாட்டியுள்ள உணவுத் துகள்களையும் அலசி வெளியேற்றி விடும். இதனால் எந்த தொற்றும் இல்லாமல் வாய் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருக்கும்.

பக்க விளைவுகள்

பெரியதாக எந்த பக்க விளைவும் ஏற்படாது. அதிகமான உப்பு கலந்து கொப்பளிக்கும் போது மேலும் தொண்டையை வறட்சியாக்கி விடும்.
தினமும் அடிக்கடி உப்பு கலந்த நீரை கொப்பளித்து வந்தால் எனாமல் மிகவும் மென்மையாகி போய்விடும். எனவே வாரத்திற்கு 2-3 முறை போதுமானது.
உப்பு கலந்த நீரை கொப்பளித்த பிறகு கண்டிப்பாக துப்ப வேண்டும். இல்லையென்றால் உடம்பில் உப்பின் (சோடியம்) அளவு அதிகரித்து இதய நோய்கள் வர காரணமாக அமையும்.
முக்கிய குறிப்பு

* வெதுவெதுப்பான நீரில் உப்பை கலக்கும் போது அது சீக்கிரம் கரைந்து விடும்.
* சூடான நீரை வாயில் வைத்து கொப்பளிக்காதீர்கள் பிறகு வாய் பொத்து விடும்.
* உப்பின் அளவு அதிகமாக தெரிந்தால் கூட கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.
* கண்டிப்பாக கொப்பளிக்கும் போது உப்பு நன்றாக கரைந்திருக்க வேண்டும். இல்லையென்றால் தொண்டையில் அதிகமான வலியை ஏற்படுத்தி விடும்.

No comments:

Post a Comment