உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங்கற்கண்டு!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, May 9, 2022

உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங்கற்கண்டு!!

மருத்துவக்குணம் நிறைந்த பொருட்களில் ஒன்றான பனங்கற்கண்டு, நிறைய சர்க்கரை படிகக்கற்கள் கலந்த, சுத்திகரிக்கப்படாத சர்க்கரை ஆகும். 


 👉 கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பனங்கற்கண்டில் அதிகளவு வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. பனங்கற்கண்டில் உள்ள அற்புதமான மருத்துவக் குணங்கள் : 

 👉 தினமும் பனங்கற்கண்டை வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்க வேண்டும். இதனால் சளி, இருமல் மற்றும் தொண்டைக் கரகரப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி பலன் கிடைக்கும். 

 👉 சிறிதளவு சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும். 

 👉 1 டேபிள்ஸ்பு ன் பசு மாட்டு நெய்யுடன், சிறிதளவு பனங்கற்கண்டு மற்றும் நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் சோர்வுகள் நீங்கி, சுறுசுறுப்பு அதிகரிக்கும். 

 👉 4 பாதாம் பருப்பு, 1 டேபிள்ஸ்பு ன் பனங்கற்கண்டு, 1 டேபிள் ஸ்பு ன் மிளகுத் தூள் ஆகியவற்றை பொடி செய்து, அதை பாலுடன் கலந்து குடித்து வந்தால், தீராத சளி பிரச்சனைகள் உடனே குணமாகும். 

 👉 தொண்டை வலி இருந்தால் 1 டேபிள்ஸ்பு ன் மிளகுத்தூள், 1 டேபிள் ஸ்பு ன் நெய் மற்றும் 1 டேபிள்ஸ்பு ன் பனங்கற்கண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டு வர விரைவில் குணமாகும். 

 👉 தினமும் சிறிதளவு பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து, இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் மற்றும் கண்பார்வை அதிகரிக்கும். 

 👉 உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 3 முறை சாப்பிட வேண்டும். இதனால் நோய்களின் தாக்கத்தையும் தடுக்கலாம். 

 👉 சிறுநீரகக் கற்கள் பிரச்சனை விரைவில் குணமாக, 3 டேபிள் ஸ்பு ன் வெங்காய ஜூஸ் மற்றும் 2 டேபிள் ஸ்புன் பனங்கற்கண்டு ஆகியவற்றைச் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட வேண்டும். பகிர்வு ⫷⫸⫷⫸🅜🅐🅛🅛🅘🅚🅐⫷⫸⫷⫸

No comments:

Post a Comment