கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பான படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் புதிய படிப்புகளை தொடங்க 190 கல்லூரிகள் விண்ணப்பம்: - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, June 2, 2022

கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பான படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் புதிய படிப்புகளை தொடங்க 190 கல்லூரிகள் விண்ணப்பம்:

கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பான படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் புதிய படிப்புகளை தொடங்க 190 கல்லூரிகள் விண்ணப்பம்: 


கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பான படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் அது சார்ந்த புதிய படிப்புகளை தொடங்க 190 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்துள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியர்களுக்கு, ஐடி துறையில் அதிக வரவேற்பு இருப்பதால், 2022-23ம் கல்வியாண்டில் கணினி அறிவியல் மற்றும் அது தொடர்பான படிப்புகளில் சேருவதற்கான ஆர்வம் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 

கணினி அறிவியல் துறை சார்ந்தவர்களின் தேவை அதிகமாக இருப்பதால் சில கல்லூரிகளில், முந்தைய பேட்ச்களை சேர்ந்த மாணவர்களும் கூட நேர்காணலில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். நிறுவனங்களின் தேவை கருதி சுமார் 140 பொறியியல் கல்லூரிகள், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஏற்கனவே இருக்கும் இடங்களை விட 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களை அதிகரித்துள்ளன. அதேபோல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சைபர் பாதுகாப்பு), கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல்) போன்ற புதிய படிப்புகளை தொடங்க 190 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்துள்ளன. 

 பெரிய நிறுவனங்கள் சில மாதங்களுக்கு முன்பே வளாக நேர்காணலுக்கு செல்ல தொடங்கியுள்ளதால் வரும் ஆண்டு மிகவும் நம்பிக்கைக்குரியதாக தெரிகிறது. கோர் படிப்புகளான சிவில், மெக்கானிக் உள்ளிட்ட படிப்புகளைவிட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கணினி அறிவியல் சார்ந்த படிப்புகள் குறித்து அதிக அளவில் விசாரிக்கின்றனர். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் 80% க்கும் அதிகமானவர்கள் கணினி அறிவியல் தொடர்பான படிப்புகள் குறித்து மட்டுமே கேட்கின்றனர். ஐடி வேலைகள் காரணமாக முக்கிய பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆர்வம் வெகுவாகக் குறைந்து வருகிறது. கணினி அறிவியல் தொடர்பான படிப்புகளுக்கு அதிக தேவை இருப்பதால், 2022-23 கல்வி ஆண்டில் கணினி அறிவியல் சார்ந்த பல்வேறு படிப்புகளை தொடங்க பல்வேறு பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. 

கணினி அறிவியல் தொடர்பான செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தகவல் பகுப்பாய்வு, இன்டர்நெட் ஆப் திங்ஸ் உள்ளிட்ட பாடங்களை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் உள்ளிட்ட கோர் பாடங்களுக்கு இணையாக கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். கடந்த ஆண்டில் புதியவர்கள் அதிக அளவில் ஐடி துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

இது வரும் காலங்களில் மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் முதன்மையான துறையாக இருப்பதால் சரியான திறன்களை பெற்றவர்களுக்கு ஐடி துறையில் நல்ல எதிர்காலம் உள்ளது. ஹெல்த்கேர், ஆட்டோ மொபைல் மற்றும் உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களில் கூடுதலாக இன்ஜினியரிங் படித்தவர்களை ஐடிக்கு பணியமர்த்துவதை நாங்கள் பார்க்க போகிறோம். டிஜிட்டல் மூலம் தயார்படுத்தப்பட்ட பொறியாளர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

190 colleges apply for computer science courses In this regard, higher education officials said: As computer science engineers are becoming more and more popular in the IT field, the interest in enrolling in computer science and related courses in the 2022-23 academic year is at an all-time high. In some colleges, students from previous batches are also invited to appear for the interview as the demand for computer science is high. Approximately 140 engineering colleges have increased their existing vacancies by more than 5,000, in fields including computer science, engineering, information technology, artificial intelligence and data science. Similarly, 190 colleges have applied to Anna University to start new courses in computer science and engineering (cyber security), computer science and engineering (artificial intelligence and machine learning). The coming year looks very promising as the big companies have already started going for on-campus interviews a few months ago. Students and parents are more interested in computer science courses than core courses, including civil and mechanical. More than 80% of people in the current year are only asking about computer science related courses compared to previous years. Interest in enrolling in major engineering courses is declining due to IT jobs. Due to the high demand for computer science related courses, Anna University has given permission to various engineering colleges to apply to start various courses related to computer science in the 2022-23 academic year. Anna University Vice-Chancellor Velraj said the department plans to make subjects related to computer science, including artificial intelligence, machine learning, information analysis, Internet of Things, parallel to core courses, including mechanical engineering and civil engineering. Over the past year a large number of newcomers have been hired in the IT sector. This is expected to increase further in the coming years. The IT sector has a bright future for those with the right skills as it is the primary sector in the field of job creation. We are going to look at hiring IT graduates in addition to IT in various industries such as healthcare, auto mobile and manufacturing. There is a bright future for engineers who are digitally prepared.

No comments:

Post a Comment