மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, June 4, 2022

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள்

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள்

பேரணிக்கான முன்னேற்பாடு சார்பான கூட்டம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடத்தப்பட வேண்டும். பேரணி நடத்துவதற்கான இடம், நேரம், நிகழ்வுகள், விளம்பரம் போன்ற விவரங்களை விரிவாக கலந்துரையாடி தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக பேரணி நடத்திடவும் கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றிடவும், இந்தியாவிலேயே தமிழகம் பள்ளி வயது அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்த்துவிட்டது என்று பெருமை அடையும் வகையிலும் விரிவான ஏற்பாடுகள் செய்திட வேண்டும். பள்ளி அளவிலும், ஊராட்சி அளவிலும், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் ஒரே நேரத்தில் இந்நிகழ்வுகள் நடைபெற வேண்டும். பள்ளி செல்லாக் குழந்தைகளின் பெற்றோர்களை இனம் கண்டு, அவர்களையும் அழைத்து அறிவுரைகள் வழங்கிப் பேரணியில் இடம் பெறச் செய்திட வேண்டும். இப்பேரணிக்காகக் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

கல்வி தொலைக்காட்சி, TAC TV மற்றும் அனைத்து தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் விழிப்புணர்வு விளம்பரம் செய்தல் 

பேரணி பற்றிய சுவரொட்டிகள். 

வரவேற்பு வளைவுகள். 

துணி / Flex board விளம்பரங்கள். 

ஆட்டோ / வேன் மூலம் ஒலிபெருக்கி விளம்பரம். 

பேரணி தொடக்க சிறப்புரை. 

பேரணி முடிவில் சிறப்புக் கூட்டம். 

துண்டு பிரசுர விநியோகம். 

மாணவர் சேர்க்கை பற்றிய வாசகம் அடங்கிய தட்டிப் பலகைகள். 

விழிப்புணர்வு பாடல்கள். 

சிறு நாடகங்கள். 

செய்தித் தாட்களில் விளம்பரம். 

தொலைக்காட்சி / உள்ளூர் கேபிள் தொலைக்காட்சியில் வரி விளம்பரம். 

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிப் பொருள் வழங்குதல். 

தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசு வழங்குதல். 

நூறு சதவீதம் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பிய கிராமங்களுக்கு பரிசு வழங்குதல்.



No comments:

Post a Comment