மாணவர் சேர்க்கை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடமைகள்
🍁அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளில் 5+ வயதுடைய
குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில்
சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
🍁பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து 5+
வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப்
பள்ளிகளில் சேர்க்க வீடுதோறும் நேரடியாக சென்று (Door to door
canvas) சேர்க்கையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ள வேண்டும்.
🍁பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் 5+
வயதுடைய
குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசுப்
பள்ளிகளில் சேர்க்க (Spot Admission) நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்.
🍁இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசுப்
பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
🍁பள்ளி அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள 5+
மாணவர்களை 100% அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது தலைமை
ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியரின் தலையாய கடமையாகும்
🍁பள்ளியின் சாதனைகள், வளர்ச்சி, பல்வேறு வகையான
அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கல்விமுறை, பாதுகாப்பு குறித்து
பெற்றோர் ஆசிரியர் கூட்டம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக்
கூட்டத்தின் வாயிலாக பெற்றோர்களிடம் எடுத்து கூறலாம்.
🍁பள்ளிகளில் உள்ள திறன் வகுப்பறைகளின் (Smart Class)
செயல்பாடுகள் பற்றியும் விரைவுத் துலங்கல் குறியீடு (Quick
Response Code) வழியாக பாடக் கருத்துகள் எளிமையாக்கப்பட்டு
கற்றல் செயல்பாடு நடைபெறுகின்றது என்பதைப் பற்றியும்
பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துக் கூற வேண்டும்.
🍁தனியார் பள்ளிகளுக்கு நிகரான இணைய வழி (Online class)
பாட கற்பித்தல் பற்றியும் புலனக்குழு (Whatsapp Group) வழி
ஆசிரியர்-மாணவர் பாட பரிமாற்றங்கள் பற்றியும்
பெற்றோர்களுக்கு விரிவாகவும் தெளிவாகவும் தெரிவித்தல்
வேண்டும்.
🍁பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கப் பரிசு வழங்குவதன்
மூலம் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கலாம்.
No comments:
Post a Comment