எலும்புகளில் ஏற்படும் குறைபாடுகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பதால், எலும்புகள் பலவீனமடைவதற்கான காரணங்கள் குறித்து இங்கு காண்போம்.
உணவுப்பழக்கம் மட்டுமின்றி நம்முடைய வாழ்க்கைமுறையும் எலும்புகளை பலவீனமாக்கும். அதேபோல் நமக்கே தெரியாமல் நாம் செய்யும் தவறுகளும் எலும்புகளில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.
உடல் இயக்கம்
நமது எலும்புகளை எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறோமோ, அவ்வளவு வலிமையாக எலும்புகள் மாறும். அதனை உபயோகிக்காதபோது அது பயனற்றதாக மாறிவிடுகிறது.
அதிகளவு மாமிசம் உண்பது
புரதம் நமது உடலில் அதிக கால்சியத்தை உறிஞ்ச வழிவகுப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகப்படியான புரதத்தை (மாமிசம்) சாப்பிடுவதால், சிறுநீரகங்கள் அதிக கால்சியத்தை வெளியேற்றக்கூடும். இதனால் எலும்புகளின் அடர்த்தி குறையும். இவ்வாறு எலும்புகளின் அடர்த்தி குறையும்போது, அது ஆஸ்டோபோரோசிஸிக்கு வழிவகுக்கும்.
நொறுக்குத்தீனிகள்
அதிக சோடியம் உட்கொள்ளும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு, குறைந்த சோடியம் உட்கொள்ளும் நபர்களைக் காட்டிலும் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புகள் நான்கு மடங்கு அதிகமாகும். இதன் காரணமாக நமது ரத்தத்தில் இருக்கும் சோடியம் மற்றும் கால்சியத்தை சிறுநீரகம் வெளியேற்றுகிறது.
குறைந்த சூரிய ஒளி
சூரிய ஒளியில் இருந்து போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்கவில்லை என்றால் எலும்புகள் பலவீனமாகும். 50 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தினமும் 800 முதல் 1000 IU வைட்டமின் டி தேவைப்படுகிறது. 50 வயதிற்கும் உட்பட்டவர்களுக்கு 400 முதல் 800 IU வைட்டமின் டி தேவைப்படுகிறது. எனவே சூரிய ஒளியை தவிர்க்காமல் அதிக நேரம் வெளியே இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
எடை குறைப்பு
அதிகளவு உடல் எடையை குறைப்பது எலும்புகளுக்கு நல்லதல்ல. உடலின் BMI 18.5க்கும் குறைவாக இருந்தால், அது ஆஸ்டியோபோரோசிஸுக்கு நோய் ஏற்பட வழிவகுக்கும். எலும்பு பலவீனமடையும் வாய்ப்பை BMI-யை அதிகரிப்பதன் மூலம் 12 சதவிதம் குறைக்கலாம்.
மதுபழக்கம்
குறைந்த அளவு ஒயின் குடிப்பது எலும்புகளுக்கு நல்லது. ஆனால், தினமும் மது அருந்தும் பழக்கம் உடையவர்களுக்கு எலும்பு பாதிப்புகள் ஏற்படும். ஏனெனில் அதிகளவு ஆல்கஹால் கார்டிசோலின் அளவை அதிகரிக்கும். இது எலும்பு தாது அடர்த்தியை குறைக்கும். எலும்பு செல்களாக மாறும் செல்களுக்கு ஆல்கஹால் நச்சுத்தன்மை வாய்ந்தது.
காற்றுமாசு
காற்றின் மாசும் எலும்புகளுக்கு பாதிப்பை உண்டாக்கும். குறிப்பாக, வயதானவர்களுக்கு ஆஸ்டோபோரியோசிஸ் ஏற்படும் வாய்ப்பை பல மடங்கு அதிகரிக்கிறது. காற்றின் தரம் மோசமாக இருக்கும் போது வெளியில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment