தினம் ஒரு தகவல் நல்ல நம்பிக்கைகளை வளர்ப்பது எப்படி?
ரோஜா செடி முள்ளை கொண்டுள்ளது என்று குறை சொல்லவும் முடியும், முள்செடி அழகிய ரோஜாப்பூவை கொண்டுள்ளது என்று சந்தோஷப்படவும் முடியும்.
சந்தோஷமும் குறையும் நம் பார்வையை பொறுத்தது. அந்த பார்வை நம் நம்பிக்கையை சார்ந்து இருக்கிறது.
மனிதர்களுக்கு சந்தோஷம் தரக்கூடியவை, நல்ல நம்பிக்கைகள். அதேவேளையில், துன்பம் தரக்கூடியவை, அவநம்பிக்கை.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், பல ஆண்டுகளுக்கு முன்புவரை நல்ல நம்பிக்கையை கொண்டு இருப்பது ஒரு மனநல குறைபாடாக, பக்குவமற்ற எண்ணத்தின் அறிகுறியாக அல்லது பலவீன குணமாக கருதப்பட்டு இருக்கிறது.
1970-களின் இறுதியில் மார்க்ரெட் மாட்லின், டேவிட் ஸ்டாங் போன்ற உளவியலாளர்கள் தங்கள் ஆராய்ச்சியின் மூலம், நல்ல நம்பிக்கை பற்றிய இந்த குறையான பார்வையை மாற்றி அமைத்தனர்.
தோல்விகளும் பின்னடைவுகளும் சறுக்கல்களும் இல்லாத வாழ்க்கையே கிடையாது. தோல்விகளில் துவளாமல் இருக்கவும், பின்னடைவுகளில் பின்தங்காமல் இருக்கவும், சறுக்கல்களில் சுணங்கிப் போகாமல் இருக்கவும் இந்தத் தளரா நம்பிக்கை மிகவும் அவசியம்.
இந்த நம்பிக்கையானது பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்து அதைத்தீர்க்கும் தெளிவான பார்வையை நமக்கு அளிக்கிறது. அது மட்டுமின்றி இந்த நம்பிக்கையானது பின்னடைவுகளில் உள்ள நல்லவற்றை மட்டும் பார்க்கும் திறனை நமக்கு அளிக்கிறது.
நல்ல நம்பிக்கையை எப்படி வளர்க்கலாம்? என கேட்கலாம்.
சிறிய சிறிய விஷயங்களுக்கும் சந்தோஷப்பட்டு, அதைத் தந்த வாழ்க்கைக்கு நன்றி சொல்லுதல், உதவி தேவைப்படுபவர்களுக்கு தாமாக முன்வந்து உதவுதல், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது, நல்ல நம்பிக்கைகளை கொண்டு இருக்கும் மனிதர்களுடன் நேரம் செலவழித்தல், கடந்துபோன நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் அதேவேளையில், அதை நினைத்து வருந்துவதை தவிர்த்தல், ஒவ்வொரு நாளையும் புதிதாக அணுகுதல், தோல்வியின்போது துவளவும் வேண்டாம், வெற்றியின் போது அளவுக்கு அதிகமாக தலைக்கனம் கொண்டு துள்ளவும் வேண்டாம் என்பதில் உறுதியாக இருத்தல் போன்ற எண்ணங்களை கொண்டு இருப்பதன் மூலம் நல்ல நம்பிக்கைகளை நம்முள் வளர்க்கலாம்.
How to cultivate good faith in an information of the day?
It is possible to complain that the rose has thorns, and one can be happy that the thorn has a beautiful rose. Happiness and decline depend on our vision. That vision depends on our faith.
Good hopes that can bring happiness to human beings. At the same time, misery can lead to despair. Surprisingly, having good faith until many years ago was considered a mental disorder, a sign of immature thinking or a weak cure. Through their research, psychologists such as Margaret Madlin and David Stong transformed this narrow view of good faith in the late 1970s.
There is no life without failures, setbacks and slips. This relaxed belief is essential to not succumb to failures, setbacks, and slips. This belief gives us a clear vision of how to face problems face to face and solve them. Not only that but this belief gives us the ability to see only the good in the setbacks. How can good faith be nurtured? You may ask.
Rejoice in the little things, give thanks for the life it has given, volunteer to help those in need, make a habit of reading the book, spend time with people with good faith, while learning lessons from past events, avoiding regret, approaching each day anew We can cultivate good faith within ourselves by having such thoughts as being determined not to push our heads too much during success.
No comments:
Post a Comment