அருகி வரும் ஐ.ஏ.எஸ். வாய்ப்புகள்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, June 2, 2022

அருகி வரும் ஐ.ஏ.எஸ். வாய்ப்புகள்!

அருகி வரும் ஐ.ஏ.எஸ். வாய்ப்புகள்! 

ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பல்வேறு குடிமைப்பணிகளுக்கு யு.பி.எஸ்.சி. மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு அந்தவகையில் 685 பேர் பணி பெறுகிறார்கள். இந்தியாவின் மிக உயரிய, மிக கடினமான போட்டி தேர்வாக கருதப்படும் யு.பி.எஸ்.சி. குடிமைப்பணி தேர்வு மூலம் மாவட்ட கலெக்டராக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிய கிடைக்கும் வாய்ப்பை இளைஞர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். 

இதன் காரணமாக, யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு வெகுவாக அதிகரித்து வருகிறது. ஆனால் குடிமைப்பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு பணி இடங்கள் அதிகரிப்பது இல்லை. மாறாக, கடந்த சில ஆண்டுகளாக யு.பி.எஸ்.சி. நிரப்பும் பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. சமீபத்தில் வெளியான யு.பி.எஸ்.சி. குடிமைப்பணி தேர்வு மூலம் நிரப்பப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 685 மட்டுமே. 

பொதுவாக ஆயிரம் பணியிடங்களுக்கு மேலாக இருந்து வந்த நிலைமாறி தற்போது 700-க்கும் குறைவான இடங்களே கிடைத்துள்ளன. அதாவது 30 சதவீதத்துக்கும் மேலாக குறைந்து இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே மிகக்குறைந்த எண்ணிக்கை. 2013-ல் 1,122, 2014-ல் 1,236 என்று இருந்த பணியிடங்கள், படிப்படியாக குறைய தொடங்கின. இந்த போக்கு இளைஞர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒருவகையில் இந்த சரிவு, கள நிலைமைக்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. நிர்வாக பரவலாக்கல் அடிப்படையில், குடிமக்களுக்கு நேரடி விரைவு சேவையை வழங்குவதில் மாநில அரசுகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. இந்த வகையில், அளவில் பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கி வருகின்றன. 

இதற்கு மக்களிடையே பெருத்த வரவேற்பும் இருக்கிறது. இதற்கு கூடுதலாக குடிமை பணி அலுவலர்கள் தேவைப்படுகிறார்கள். மக்கள் தொகை பெருகப்பெருக, மக்களின் கோரிக்கைகள் கூடக்கூட, அரசின் நலத்திட்டங்கள் மேலும் விரிவடைய விரிவடைய, குடிமைப்பணி அலுவலர்களின் எண்ணிக்கையும் அதற்கு ஏற்ப பெருகத்தானே செய்யும்? ஆனால் யு.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. ஏற்கனவே காலியாக இருக்கிற, மேலும் புதிதாய் உருவாகியிருக்கிற பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புதல் மிக அவசியம். காரணம், அரசுக்கும், மக்களுக்கும் இடையே ஒரு நல்லுறவுப்பாலமாக, ஓர் இணைப்பு தடமாக இருப்பவர்கள் குடிமைப்பணி அலுவலர்கள். அரசின் திட்டங்களை செயல்படுத்துகிற அதிகாரம் மட்டுமல்ல; மக்களின் குறிப்பு அறிந்து அரசுக்கு தெரியப்படுத்துகிற ஜனநாயக கடமையும் இவர்களுக்கு உண்டு. 

இத்தனை பொறுப்புமிக்க பணியிடங்களுக்கு வந்து சேவை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு, போதுமான வாய்ப்புகளை வழங்க வேண்டாமா?. குடிமைப்பணி அலுவலர்களை, நேரடித்தேர்வு மூலமாக அல்லாமல் பணி மூப்பின் அடிப்படையில் அனுபவசாலிகளை பணி உயர்வு செய்வதும் நல்ல நிர்வாக நடவடிக்கையே. மனதார வரவேற்கலாம். ஆனால் இந்த வழிமுறையிலும் தேக்கம் இருக்கவே செய்கிறது. அடுத்த நிலையில் உள்ள அலுவலர்களை, உடனுக்குடன் குரூப்-1 நிலையிலான குடிமைப்பணிக்கு உயர்த்தி வழங்குதல் அனேகமாக எப்போதுமே சரியான காலத்தில் நடைபெறுவதில்லை. குடிமைப்பணிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகியன மிகவும் வித்தியாசமானவை. 

இந்த அலுவலர்கள் ஒரு குறிப்பிட்ட மாநில பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறார்கள். அரசு நிர்வாகத்தில் இவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆனால் இவர்களை மாநில அரசின் விருப்பம் இன்றியும் மத்திய அரசு, தனது பணிக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று விதிமுறைகளில் திருத்தம் செய்ய மத்திய பணியாளர்-பயிற்சி துறை முனைகிறது. மத்திய அரசு கோரும்போது வேண்டிய எண்ணிக்கையில் குடிமைப்பணி அலுவலர்களை மாநில அரசு அனுப்புவதில்லை என்று காரணம் சொல்கிறது. ஆனால் மாநில அரசுகளுக்கும் குடிமைப்பணி அதிகாரிகளுக்கும் பற்றாக்குறை இருக்கிறது. 

மேலும் மத்திய அரசு பணியை பல அலுவலர்கள் விரும்புவதில்லை என்று மாநில அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்கவும் குடிமைப்பணி அலுவலர்களின் பணியிடங்கள் முழுதாக நிரப்பப்பட வேண்டும். அலுவலர், பணியாளர் நியமனத்தில் செலவு கணக்கை மட்டுமே பார்த்துகொண்டிருக்க முடியாது. அரசு தரும் அவசர நிவாரணம், நியாயமான உதவி பொதுமக்களை உரிய முறையில் உடனுக்குடன் சென்று சேர வேண்டும். ஒரு ஜனநாயக அரசின் அடிப்படை கடமைகளில் இதுவே மிகவும் முக்கியமானது. இதனை செவ்வனே நிறைவேற்றி தருகிற பொறுப்பும், ஆற்றலும் கொண்டவர்கள் குடிமைப்பணி அலுவலர்கள். இவர்களை முழு எண்ணிக்கையில் ஈடுபடுத்தி மக்களுக்கு பணி செய்ய வைப்பதே அரசுக்கும், மக்களுக்கும் நல்லது.

The approaching I.A.S. Opportunities!

Annually IAS, IPS, IPS, IRS UPSC for various civil services including Qualified persons are selected by. This year 685 such people are employed. Considered to be India's highest, toughest competitive exam, UPSC Young people are desperate for the opportunity to work as a District Collector and District Superintendent of Police through civil service selection.

Due to this, the UPSC The number of young people applying for the exam is also increasing year by year. But job vacancies are not increasing as the number of young people applying for the civil service exam is increasing. On the contrary, for the past few years UPSC The number of vacancies to be filled is declining. Recently released UPSC The number of vacancies filled by civil service selection is only 685.

The transition, which used to be more than a thousand jobs, now has less than 700. That is, less than 30 percent. This is the lowest number in the last 10 years. The number of jobs rose from 1,122 in 2013 to 1,236 in 2014. This trend is likely to cause massive frustration among young people. In a way this decline is in stark contrast to the field situation. In terms of administrative decentralization, state governments are very interested in providing direct express service to the citizens. In this way, large districts by size are divided and new districts are formed.

This is very popular among the people. In addition, civil service officers are required. As the population grows, and the demands of the people increase, will the government's welfare programs expand and expand, and will the number of civil servants increase accordingly? But the UPSC The number of people selected by is declining. It is imperative to fill existing vacancies and newly created vacancies immediately. The reason is that civil servants are the bridge between the government and the people. Not only the power to execute government programs; They also have a democratic duty to know the views of the people and to inform the government.

Don’t you provide enough opportunities for young people who want to come and serve in so many responsible workplaces ?. It is also a good management practice to promote civil servants, not by direct selection, but by experience based on seniority. Welcome heartily. But even in this way the stagnation remains. Promotion of next-level officers to immediate Group-1 level civil service is probably not always timely. IAS, IPS in Civil Services. Are very different.

These officers are assigned to a specific state task and operate under the control of the respective state government. Their contribution to the administration of the state is immense. But the Central Personnel-Training Department seeks to amend the rules so that the Central Government can invite them to its work without the consent of the State Government. The reason is that the state government does not send the required number of civil servants when requested by the central government. But there is a shortage of state governments and civil servants.

And the state government is saying that many officials do not like the work of the central government. To solve this problem the vacancies of civil servants should be filled in full. The officer cannot look only at the expense account in the appointment of the employee. Emergency relief provided by the government and fair assistance should go to the public in a timely manner. This is one of the fundamental duties of a democratic government. Civil servants are the ones who have the responsibility and the power to do this on Tuesday. It is in the best interest of the government and the people to involve them in full numbers and make them work for the people.

No comments:

Post a Comment