இதற்கான விண்ணப்பப்பதிவு நேற்று முதல் தொடங்கி இருக்கிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 22-ந்தேதி ஆகும். விண்ணப்பப் பதிவில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதனை சரி செய்து கொள்வதற்கு அடுத்த மாதம் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குரூப்-1 பதவிகளில் வரும் இடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அதன்படி, முதல்நிலைத் தேர்வு அக்டோபர் மாதம் 30-ந்தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பான மேலும் தகவல்கள் https://www.tnpsc.gov.in/english/notification.aspx என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
கடந்த 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 66 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, சமீபத்தில்தான் தகுதியானவர்களின் தற்காலிக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது புதிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment