வாக்காளர் அட்டை - ஆதார் ஆகஸ்ட் 1 முதல் இணைப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, July 9, 2022

வாக்காளர் அட்டை - ஆதார் ஆகஸ்ட் 1 முதல் இணைப்பு

நாடு முழுதும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் இப்பணி, ஆக., 1 முதல் துவக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, நேற்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, ஆலோசனை நடத்தினார்.அப்போது, வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க, தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள அறிவுரைகளை எடுத்துரைத்தார். 

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள், தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணை வழங்குவதற்கு வசதியாக, படிவம் '6 பி' வழங்கப்பட உள்ளது.இப்படிவத்தை, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிட்டு, 'ஆன்லைன்' வழியாக ஆதார் எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களிடம் படிவம் 6 பி வழங்கி, ஆதார் எண் பெறவும், சிறப்பு முகாம்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

மேலும், ஆதார் எண் இணைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதார் எண் தர இயலாதவர் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது என்றும், தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண் இணைக்கப்பட்டால், கள்ள ஓட்டுப்பதிவை குறைக்க முடியும் என, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment