கரும்புள்ளிகளை எளிதினில் நீக்க உதவும் இயற்கை அழகு குறிப்புகள் !! - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, July 29, 2022

கரும்புள்ளிகளை எளிதினில் நீக்க உதவும் இயற்கை அழகு குறிப்புகள் !!

கரும்புள்ளிகளை எளிதினில் நீக்க உதவும் இயற்கை அழகு குறிப்புகள் !! எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும். 

 உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும். வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். 

பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும். கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம். 
 இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும். எலுமிச்சசம் சாற்றினை ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 5-6 நிமிடங்கள் அதனை அப்படியே காய விடுங்கள். அதன்பிறகு முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள் முக‌‌த்‌தி‌ல் உ‌ள்ள கரு‌ம்பு‌ள்‌ளிக‌ள் ‌நீங்கும்

No comments:

Post a Comment