11-ம் வகுப்பில்
‘வேலைவாய்ப்பு திறன்கள்' என்ற புதிய பாடம் அறிமுகம்
பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை சீரமைக்க உயர்மட்ட குழு அமைக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறையால் அரசாணை வெளியிடப்பட்டது.
அவ்வாறு அமைக்கப்பட்ட குழு அடிப்படை எந்திரவியல், மின் பொறியியல், மின்னணு பொறியியல், நெசவியலும் ஆடை வடிவமைப்பும், செவிலியம், வேளாண் அறிவியல், அலுவலக மேலாண்மையும் செயலியலும் தட்டச்சு கணினி பயன்பாடுகளும், கணக்குப்பதிவியலும் தணிக்கையியலும் ஆகிய 8 பாடநூல்களை மறுசீரமைப்பு செய்ய பரிந்துரைத்தது. அதன்படி பாடநூல்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 11-ம் வகுப்பில் வேலைவாய்ப்பு திறன்கள் என்ற புதிய பாடம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கணினி தொழில்நுட்பம், கணினி பயன்பாடுகள் என்ற பாடத்திற்கு மாற்றாக வேலைவாய்ப்பு திறன்கள் என்ற பாடம் இடம்பெறுகிறது. வேலைவாய்ப்பு திறன்கள் என்ற இந்த பாடநூலை tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த புதிய பாடம் இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment