இளம் வயது மாணவர்களை திருத்த இதுவே வழி' 4 பள்ளிக்கூடங்களில் தலையங்க பதாகைகள் : மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, August 9, 2022

இளம் வயது மாணவர்களை திருத்த இதுவே வழி' 4 பள்ளிக்கூடங்களில் தலையங்க பதாகைகள் : மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டு

இளம் வயது மாணவர்களை திருத்த இதுவே வழி' 4 பள்ளிக்கூடங்களில் ‘தினத்தந்தி' தலையங்க பதாகைகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டு


இளம் வயது மாணவர்களை திருத்த இதுவே வழி' 4 பள்ளிக்கூடங்களில் ‘தினத்தந்தி' தலையங்க பதாகைகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டு மாணவர்களை நல்வழிபடுத்தும் வகையில், ‘இளம் வயது மாணவர்களை திருத்த இதுவே வழி' என்ற தலைப்பில் ‘தினத்தந்தி’யில் நேற்று தலையங்கம் வெளியாகி இருந்தது. 
மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த விழிப்புணர்வு தலையங்கம் பதாகை வடிவில் தென்காசி மாவட்டத்தில் 4 பள்ளிக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவில் சார்பில் அவ்வப்போது ‘தினத்தந்தி'யில் வெளியாகும் விழிப்புணர்வு தலையங்கங்கள் பொதுமக்கள், பக்தர்கள் காணும் வகையில் பார்வைக்காக வைக்கப்பட்டு வருகிறது. 


அந்த வகையில், இளம் வயது மாணவர்களை திருத்த இதுவே வழி என்ற தலையங்கம் பள்ளிக்கூடங்களில் தோரணமலை கோவில் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் கூறியதாவது:- தினத்தந்தியில் தொடர்ந்து சமுதாயம் நலன் சார்ந்த தலையங்கம் எழுதப்பட்டு வருகிறது. 


இதனை தோரணமலைக்கு வரும் பக்தர்கள், குழந்தைகள் அறிந்து கொள்ள நாங்கள் பெரிய எழுத்துகளில் பதாகை வடிவில் வைத்து வருகிறோம். அதிலும் ‘இளம் வயது மாணவர்களை திருத்த இதுவே வழி' என்ற தலையங்கம் தவறு செய்யும் மாணவர்களின் அறிவை மேம்படுத்தி. நல்ல செயல்களை செய்யும் வகையில் இருக்கிறது. 
இன்றைய மாணவர்களின் குணநலன்களை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. எனவே நாங்கள் பக்தர்கள் துணையுடன் தோரணமலையை சுற்றியுள்ள மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளி, புல்லுக்காட்டு வலசை அரசினர் உயர்நிலைப்பள்ளி, திரவியநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிவநாடானூர் இந்து நடுநிலைப்பள்ளி என 4 பள்ளிக்கூடங்களில் தினத்தந்தி தலையங்க பதாகையை மாணவர்களின் விழிப்புணர்வுக்காக வைத்து இருக்கிறோம். இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment