நம்முடைய பாதங்களை பராமரிக்க உதவும் சில அழகு குறிப்புகள் !! - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, August 12, 2022

நம்முடைய பாதங்களை பராமரிக்க உதவும் சில அழகு குறிப்புகள் !!

நம்முடைய பாதங்களை பராமரிக்க உதவும் சில அழகு குறிப்புகள் !!
தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷினால் சுத்தம் செய்யவும்.

பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.

உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வர வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதம் மின்னும். பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

பாதத்தை அடிக்கடி உயர்த்துவது, நின்று கொண்டிருப்பது, கால்களை நீட்டுவது, நடப்பது ஆகிய உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் பாதத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம்.

பாதத்துக்கு மசாஜ் செய்தல் மற்றும் மிதமான சுடுநீரில் பாதத்தைக் கழுவுதல் ஆகியவை பாதங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பாதங்களில் வியர்வை சுரப்பிகள் இருப்பதால் வியர்த்த பாதங்களில் செருப்பு அணியக்கூடாது. கால்களில் காயம் மற்றும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்க்கவும்.



No comments:

Post a Comment