தினமும் சைக்கிளில் பயணம் செய்து பாருங்கள்..? இத தெரிஞ்சிக்கிட்டா இனிமே சைக்கிள்ல போகாம இருக்க மாட்டிங்க .!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 18, 2022

தினமும் சைக்கிளில் பயணம் செய்து பாருங்கள்..? இத தெரிஞ்சிக்கிட்டா இனிமே சைக்கிள்ல போகாம இருக்க மாட்டிங்க .!!

தினமும் சைக்கிளில் பயணம் செய்து பாருங்கள்..? இத தெரிஞ்சிக்கிட்டா இனிமே  சைக்கிள்ல போகாம இருக்க மாட்டிங்க .!!!



உடல் நலத்தைக் காப்பதில், நாம் ஏராளக்கணக்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் தினமும் காலையில் நாம் செய்யும் உடற்பயிற்சியினால், பல்வேறு வகையான நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.

உடற்பயிற்சி செய்வதன் மூலம், நம் உடல் முழுவதும் வலிமை பெறுகின்றன. அவ்வாறு, உடற்பயிற்சியில் நிறைய வகைகள் உள்ளன. அந்த வகையில், நாம் இந்தப் பகுதியில் பார்ப்பது சைக்ளிங் ஆகும்

சைக்கிள் ஓட்டுதல்

நாம் அன்றாட வாழ்க்கையில் செய்யும் பழக்க வழக்கங்களே நம்முடைய உடல் நலத்திற்குக் காரணமாக அமைகிறது. தினசரி அளவில் பெண்கள் செய்யக் கூடிய வீட்டு வேலைகளும் நமக்கு நல்ல பலன்களை அளிக்கின்றன . இந்த டூவீலர் வண்டி வாகனங்கள் வந்த பிறகு யாரும் சைக்கிளைப் பயன்படுத்துவதில்லைஆனால், சைக்கிள் ஓட்டுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இதை அறியாதவர்களே அதனை விட்டு விட்டு வண்டி வாகனங்களை உபயோகிக்கின்றனர். இந்தப் பகுதியில் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிப் பார்க்கலாம். சைக்கிள் ஓட்டுவதால், ஒரு நபரின் உடல்நலம் மற்றும் உடற்தகுதிக்குப் பயனளிக்கும் வகையில் அமையும்.

                        

சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்

சைக்கிள் ஓட்டுதல் மூலம் கிடைக்கக்கூடிய நற்பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உடல் எடையைக் குறைப்பதற்கு

வழக்கமாக, நாம் எங்கு சென்றாலும் சைக்கிளில் செல்லும் போது நம் உடல் எடை குறைக்கப்பட்டும். நமது அனைத்து வகையான முயற்சிகளையும் செலுத்தும் போது, உடலில் உள்ள கொழுப்பு குறைந்து ஆரோக்கியமான எடை மேலாண்மையைத் தருகிறது. பொதுவாக, உடலில் வியர்வை வரும் போது, நம் உடலில் இருக்கும் அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றனஆய்வு மேற்கொண்ட போது, சைக்கிள் ஓட்டுதல் உடலளவு மட்டுமல்லாமல், மனதளவிலும் நன்மையைத் தரக் கூடியதாகும்.

                                                       

மன ஆரோக்கியம் மற்றும் மூளை சக்தி அதிகரிக்க

சைக்கிள் ஓட்டுவதால் நம் மன அழுத்தம் குறைந்து காணப்படுவதுடன், மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகிய உணர்வுகளையும் எளிதாக நீக்கும். இருந்தபோதிலும், சாலையில் கவனம் செலுத்துவது மிக நல்லது

ஆய்வறிக்கையின் படி, சைக்கிள் ஓட்டுவதால், ஒருவரின் அறிவாற்றல் திறம்பட செயல்படும். எனவே, இது நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக உள்ளது.

எதாவதொரு கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் போது, சைக்கிளில் சென்று பாருங்கள். மனதில் எந்தவித பதட்டமும் இருக்காது. இதன் மூலம், புற்றுநோய் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கவும் முடியும் .

காலையில் தொடங்குதல்

.மேலும், நாம் சைக்கிள் ஓட்டும் போது காலுக்கு அதிக வேலை கொடுப்பதால், அது மிகவும் வலுவான நிலையை அடைகிறது. இதன் மூலம், மூட்டு வலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்

தினமும், காலைவேளையில் நாம் செய்யும் உடற்பயிற்சியினால், அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். எனவே இந்த நேரத்தில் சைக்கிளில் சென்று வருவதன் மூலம், அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்க முடியும்.

காலை எழுந்தவுடன் சைக்கிளில் பயணம் செய்து பாருங்கள். அன்றைய நாளில் உங்களுடைய புத்துணர்ச்சி எப்படி இருக்கும் என்று. சைக்கிளில் பயணம் செய்வதால், இன்னொரு முக்கியமான பயன் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைக்கப்படும்.

உடல் கொழுப்பைக் குறைப்பதற்கு

பைக் ஓட்டுவது மிக எளிமையானது. அதனால், எல்லோரும் பைக் ஓட்டுவதில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கின்றனர். ஆனால், சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் கறைந்து உடலிற்கு மிகுந்த நன்மையைத் தருகிறது. சைக்கிள் ஓட்டுவதால், இருதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.

 

No comments:

Post a Comment