சைனஸ் பிரச்சனையை போக்க எளிய வைத்தியங்கள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, August 30, 2022

சைனஸ் பிரச்சனையை போக்க எளிய வைத்தியங்கள்

சைனஸ் பிரச்சனையை போக்க எளிய வைத்தியங்கள்:
சைனஸ் பிரச்சனை பாடாய் படுத்துதா? இதனை போக்க இதோ சில எளிய வைத்தியங்கள்

பொதுவாக சைனஸ் பிரச்சனை குளிர் அல்லது ஒவ்வாமை காரணமாக ஏற்படுகிறது.

சைனஸ் பிரச்சனையை சந்திப்பவர்கள் அடிக்கடி சளி, ஜலதோஷம் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

இவற்றை எளியமுறையில் கூட போக்கலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.

ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் ஒரு நல்ல பலனை காணலாம்.

ஒரு பாத்திரத்தில் சுடுநீரை நிரப்பி, அதிலிருந்து வரும் நீராவியை சுவாசிக்கலாம். இதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சுடுநீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இது சுவாசப் பாதையில் உள்ள சளியைக் கரைத்து வெளியேற்ற உதவி புரிந்து, சைனஸ் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கிறது.

சைனஸ் பிரச்சனையால் அவதிப்படும் போது ஒன்று அல்லது இரண்டு துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயை ஒரு துணியில் ஊற்றி, அதை சுவாசிக்க வேண்டும். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 சுடுநீரில் சிறிது மிளகுத் தூளை சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்க வேண்டும். வேண்டுமானால் இதில் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ளலாம். ஆனால் வாய்ப்புண் இருந்தால், இந்த வழியைப் பின்பற்றாதீர்கள்


No comments:

Post a Comment